கலைஞரின் சட்டமன்ற உரைகள்
79
அணைகளைக் கட்டுவதற்கு மூன்று மாநில அரசுகளுடைய, இந்த மூன்று தொடர்புடைய கட்சிக்காரர்களுடைய அபிப்பிராயங் களைத் தெரிந்தாக வேண்டும், அதில்லாமல் ஒப்புதல் அளிப்பதற்கு இயலாது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். நாம் இங்கு எழுப்புகிற கேள்வி எல்லாம் மூன்று பேர்களுடைய அபிப்பிராயங்களைத் தெரிந்து கொள்ளாமல் ஒப்புதல் அளிக்க முடியாது என்று கூறுகிறார்கள்; ஒப்புதல் பெறாமல் கட்டிக் கொண்டு போகிறார்கள் அவர்கள், அதற்கு இவர்கள் இதுவரையில் என்ன நடவடிக்கைகள் எடுத்தார்கள் என்பதுதான் நம் கேள்வி. தூங்குகிறவன் தொடையில் கயிறு திரிப்பது என்று சொல்வார்கள். இப்போது மத்திய அரசாங்கம் விழித்துக் கொண்டிருப்பதுபோல் காட்டிக்கொள்கிறது. ஆனால் அவர்கள் தொடையில் கயிறு திரிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் நாம் நிறைவேற்றியிருக்கிற தீர்மானம் நாடாளுமன்றத்தில் எள்ளி நகையாடப்பட்டிருக்கிறது என்பதை இம்மாமன்றத்தின் மூலம் தலைவர் அவர்களே, உங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டு வந்து அது இந்தப் பேரவையையே அவமானப்படுத்தியதாகக் கருதுகிறேன், அதற்கு தங்கள் கருத்தினையும், இந்தப் பேரவையின் உணர்ச்சிகளையும் பெருமைகளையும் காப்பாற்றுகிற அளவிற்கு தாங்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்றும் நான் கேட்டுக் கொள்கிறேன். அங்கு மைசூர் மாநில நாடாளுமன்ற உறுப்பினர் பேசும்போது 'Why should the Tamil Nadu Government come forward and create hulla gulla, I do not understand. The Agreement is subsisting till 1974. So, why should they make this gullatta and hulla gulla.' என்று குறிப்பிட்டிருக்கிறார்கள் 'ஹல்லா ஹுல்லா' என்பது என்னவென்று தெரியவில்லை. கலாட்டா என்பது புரிகிறது. இரண்டு வார்த்தைகளுமே ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்தான், தமிழக அரசு இங்கே ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுகிறது என்றால் அதை ஹல்லா ஹுல்லா, கலாட்டா என்று இரண்டு வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்த அரசின் சார்பில் இந்த அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கலாட்டா தீர்மானம் என்பது போலவும் ஹல்லா ஹுல்லா என்றும் உபயோகிக்கத் தகாத வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தி இங்கு ஒரு குழப்பமான