உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

காவிரிப் பிரச்சினை மீது

மாண்புமிகு உறுப்பினர் டாக்டர் ஹாண்டே அவர்கள் குறிப்பிட்டதுபோல், நடுவர் தீர்ப்புக்கே இவர்கள் விடாத ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள் என்பது போன்று பொருள் ஒலிக்கிற வகையில்தான் திரு. கே.எல். ராவ் அவர்கள் பதில் அமைந்திருக்கிறது.

அவர்களுடைய பதிலில் இந்த பட்டியலில் சேர்க்கப் பட்டுள்ள ஆறுகளில் கட்டப்படுகிற அணைகளில் மத்திய அரசின் ஒப்புதலைப் பெறாமலும் ஒப்பந்தங்களில் குறிப்பிட் டுள்ளதைப் போன்று மாநில அரசுகளின் முன் இசைவைப் பெறாமலும் அந்த அணைகள் கட்டப்படுகிறதே என்பதைப் பற்றி எந்தப் பதிலும் அவர்களது உரையில் இருப்பதாகத் தெரியவில்லை. அது தெரியாதது மட்டுமல்ல. அந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிற ஆறுகளில் கட்டப்படுகிற அணைகளுக்கு நாம் அனுமதி வழங்குவது என்பது சிரமமானது என்று கூறிவிட்டு ஆனால் அதே நேரத்தில் பட்டியலில் சேர்க்கப்படாத ஆறுகளில் சேர்க்கப்படுகிற அணைத் திட்டங்களுக்கு மத்திய அரசு கன்கரன்ஸ் ஒப்புதல் வழங்கும் என்று கூறியிருப்பது குதிரை கீழே தள்ளியதுமல்லாமல் குழியும் பறித்த கதையாகத்தான் இருக்கிறது. வெந்த புண்ணில் வேலைச் சொருகுவதுபோல் திரு. கே.எல். ராவ் அவர்களின் பேச்சு அமைத்திருக்கிறது என்பதை நான் தமிழக மக்களின் சார்பாக மிகுந்த வருத்தத்தோடு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். அவர்கள் பேச்சுக் குறிப்பில் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள் :

'So far as the clearance of projects in the non-sched- uled rivers in the Cauvery basin is concerned, that will be done and there is no difficulty about it.'

என்று குறிப்பிட்டு விட்டார்கள். பிறகு,

'As regards the Clearance of projects in the scheduled rivers this is matter on which the Government of India has got to be very careful. They have got to satisfy all the requirements of every-body. Unless there is general agreement between the three parties, it will not be possible to clear the projects on the Scheduled rivers'. என்று ஷெடியூல்ட் ஆறுகளில் அந்த