உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

77

உரை : 6

நாள் : 14.07.1971

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இங்கே கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலும், சுதந்திராக் கட்சியின் சார்பிலும், முஸ்லீம்லீக் கட்சியின் சார்பிலும் தரப்பட்டுள்ள ஒத்தி வைப்புத் தீர்மானங்களையொட்டி சில கருத்துக்களை நான் கூற விரும்புகிறேன்.

அண்மையில் இந்த மாமன்றத்திலும், மேலவையிலும் தமிழ்நாட்டு மக்களுடைய குரலை எதிரொலிக்கின்ற வகையிலும் தமிழ்நாட்டுக்கு வர இருக்கின்ற ஆபத்தை உணர்த்துகின்ற வகையிலும் மைசூரின் தன்னிச்சையான போக்கினால் இந்தியாவில் ஒருமைப்பாட்டுக்கே உலை நேரிடக்கூடும் என்ற அச்சத்தைத் தெரிவித்தும், தீர்மானம் ஒன்றினை நம்முடைய பண்பாடும், நாம் கட்டிக் காத்து வருகின்ற நல்ல மரபும் எள்ளளவும் கெடாத அளவுக்கு நிறைவேற்றி அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து, மத்திய அரசினுடைய பதில் 15 நாட்களுக்குள்ளாக எதிர்பார்க்கப்படுகிறது என்று எதிர்பார்த்து அந்தப் பதிலுக்குப் பிறகு மீண்டும் அனைத்துக் கட்சித் தலைவர்களுடைய கூட்டத்தைக் கூட்டி, மேலே என்ன நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்பது குறித்து ஆராயலாம் என்று அறிவித்தும் காவிரி நீர்த் தகராறில் நம்முடைய உணர்வுகளை எடுத்துக்காட்டி இருக்கிறோம்.

ஆனால் அதற்கிடையில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பதிலுரை பகர்ந்த மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் திரு. கே.எல். ராவ் அவர்கள் அளித்திருக்கிற பதில் நமக்கு அதிர்ச்சி தரக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது, அவர்கள் நடுவர் தீர்ப்புக்கு விடுகிற இந்தப் பிரச்சிைைனயில் காலதாமதம் செய்வது மாத்திரமல்லாமல்,