கலைஞரின் சட்டமன்ற உரைகள்
85
உரை : 8
நாள் : 30.03.1973
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, இறுதியாக, காவிரிப்பிரச்சினை குறித்து எதிர்க் கட்சித் தலைவரவர்களும், நண்பர் திரு.சுவாமிநாதன் அவர்கள் இடையிடையே குறுக்கிட்டும், தமிழ் நாட்டு மக்கள் எந்த அளவுக்கு இன்றைக்கு மைசூர் மாநிலத்துடைய அறிக்கைகளால் புண்படுத்தப்பட்டிருக்கிறார்கள். மக்களின் உள்ள உணர்வுகளைப் புண்படுத்தியிருக்கிறார்கள் என்பதைக் கூறினார்கள். பொருத்தமான உதாரணத்தையும் எதிர்க் கட்சித் தலைவர் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். அந்தக் காலத்திலே உருவாக்கப்பட்ட "முல்கி" சட்டத்திற்கு இன்றைக்கு உச்சநீதி மன்றம், அது தொடர்ந்து இருக்கலாம் என்கின்ற தீர்ப்பைக் கொடுத்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டினார்கள். 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தம் இன்றைக்கும் நிலைநிறுத்தப்பட முடியாத ஒன்றா என்ற கேள்வி எழுப்பினார். 1924 ஆம் ஆண்டு ஒப்பந்தம் எந்த வகையிலும் மீறப்படக் கூடாது என்பதில் நம்முடைய அரசு மிகுந்த பிடிவாதமாக இருக்கிறது - உறுதியாக இருக்கிறது என்பதை நான் இந்த அவையில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இந்தப் பிரச்சினை குறித்து சட்டப் பேரவையிலேயும் மாண்புமிகு உறுப்பினர் பலர் வினாக்களை எழுப்பினர். இங்கேயும் அதுபற்றிய பேசப்பட்டிருக்கிறது. அவர்களெல்லாம் எடுத்துக்காட்டியது போல, நம்முடைய தமிழ் நாட்டுக்குள்ள அடக்க உணர்வோடு, மெத்த பண்பாட்டோடு நாம் இந்தப் பிரச்சினையை அணுகி வருகின்றோம். இந்த நேரத்திலே நாம் உணர்வுக்கு இடம் தராமல்
உணர்ச்சி பொங்கி எழுந்துவிடுமேயானால், அதன் காரணமாக ஏற்படுகின்ற ஊறுகளை அதனுடைய பின்விளைவுகளை எண்ணிப்பார்த்து மைசூர் மாநில மக்களுக்கும், அல்லது கேரள மாநில மக்களுக்கும், அல்லது தமிழ் நாட்டிலே இருக்கின்ற மக்களுக்குமிடையே ஏற்படுகின்ற மனக்கசப்பை முற்ற
ல