86
காவிரிப் பிரச்சினை மீது
விடக்கூடாது என்பதில் நாம் மிகுந்த எச்சரிக்கையாக இருந்து வருகின்றோம். ஏனென்றால், மைசூர் மக்களுக்கு விளக்கம் அளிக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம். மைசூர் மக்கள் நம்முடைய சகோதரர்கள். அதைப் போலவே தமிழ் நாட்டிலுள்ள தமிழ்ப் பெருங்குடி மக்களும் அவர்களுக்கு சகோதரர்கள். இந்தியாவின் ஒருமைப்பாட்டினைப்பற்றிப் பேசுகின்ற நேரத்தில் மைசூர் மாநில மக்களுக்கு காவிரியினால் கிடைக்கின்ற பயன்களை நாம் அழித்துவிட வேண்டும், தடுத்துவிட வேண்டுமென்று எண்ணுகின்ற குறுகிய நோக்கத்தோடு இந்தப் பிரச்சினையை அணுகவில்லை. ஆனால் ஏற்கெனவே நம்முடைய வயல்கள் வளப்படுத்தப்பட்டு அதன் காரணமாக தஞ்சை மாவட்டமும் தொடர்புடைய பகுதிகளும் செழிப்புற்று தமிழ்நாடே தஞ்சை மாவட்டத்தை நம்பியிருக்கின்ற சூழ்நிலையில் இன்றைக்கு திடீரென்று நாம் ஏற்கெனவே உள்ள ஒப்பந்தத்திற்கு விரோதமாக நடப்போம் என்று சூளுரைத்து, மைசூர் அரசு போர் தொடுக்குமேயானால், தமிழகமே இருண்ட நிலமாக ஆகிவிடுமென்பதை பல முறை மத்திய அரசுக்கு எடுத்துக் கூறியிருக்கின்றோம். பேரறிஞர் அண்ணா அ அவர்கள் முதலமைச்சராக இருந்த அந்த நேரத்திலே பொதுப்பணித் துறை அமைச்சர் என்ற முறையிலே நான் பல முறை அந்நாள் மைசூர் முதலமைச்சர் வீரேந்திர படீல் அவர்களோடும் மத்திய அமைச்சர்களோடும் டெல்லிப் பட்டணத்தில் சந்தித்து இதுபற்றி விவரங்களை எடுத்துரைத்திருக்கின்றேன். இப்படி பல முறை எடுத்துச் சொல்லியும் கூட, மாநாடுகளை நடத்தியும்கூட, முதலமைச்சர்களின் மாநாட்டை நடத்தியும் கூட இறுதி முடிவினை மத்திய அரசு எடுக்கவேயில்லை. நான் இதிலே மைசூர் அரசைக் குறை கூறுவதைவிட, குறை கூற வேண்டியது மத்திய அரசைத்தான் என்பதை இந்த மாமன்றத்தில் எடுத்துச்சொல்வது மிகப்பொருத்தம் என்று நான் கருதுகின்றேன். அவர்கள் அனுமதித்திருந்தால், இதை சுமுகமாக.....
திரு. கே. எஸ். அப்துல் வகாப் : தலைவரவர்களே, கேஸ் போட்டிருந்தோம். அந்த கேஸை வாபஸ் வாங்கிக் கொண்டோம். வாபஸ் வாங்கிக்கொள்ளும்போது, மைசூர் அரசு ஏதாவது வாக்குறுதி கொடுத்திருந்ததா? அதைப்பற்றிச் சொல்ல வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.