கலைஞரின் சட்டமன்ற உரைகள்
87
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : சொல்கிறேன், மத்திய அரசு முழுப் பொறுப்பையும் ஏற்கவேண்டியதாக இருக்கிறது. ஏனென்றால், அவர்கள் ஹேமாவதி போன்ற திட்டங் களுக்கு நேரடியாக அனுமதியைத் தரவிட்டாலும், மைசூரிலே முதலமைச்சர் வீரேந்திர பட்டீல் ராஜினாமா செய்தபிறகு, அவர் களுடைய நிதிநிலை அறிக்கை பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டு ஒப்புதல் வழங்கப்பட்ட நேரத்தில், ஹேமாவதி திட்டங்களுக்கான பண ஒதுக்கீட்டை பாராளுமன்றத்தில் செய்தார்கள். அது மறைமுகமாக தமிழக அரசுக்கு விரோதமாக நான்கு கோடி மக்களுடைய எண்ணங்களுக்கு விரோதமாக செய்யப்பட்ட காரியம் என்பதை அன்றைக்கே நாம் அழுத்தந்திருத்தமாக எடுத்துரைத்திருக்கிறோம். ஆனாலும் மாநிலத் தகராறுகளை முற்றவிடக் கூடாது என்பதிலே நாம் காட்டிய பொறுமையின் காரணமாக, மத்திய அரசு சமரச உடன்பாடுகளுக்கு வந்த நேரத்திலேயெல்லாம், நாம் மிகுந்த பொறுப்புணர்ச்சியோடு நடந்திருக்கிறோம். அவர்கள் நாம் எப்படிப்பட்ட உடன்பாட்டிற்கு வந்தோமென்று கேட்டார்கள். நாம் இந்த வழக்கை வாபஸ் வாங்கினோமென்றால் ஒரு “கண்டிஷன்”-னோடுதான் வாபஸ் வாங்கியிருக்கிறோம். "with liberty to file" என்கின்ற நிபந்தனையோடுதான் நாம் வாபஸ் வாங்கியிருக்கிறோம். மறுபடியும் அந்த வழக்கை நாம் எப்போதும் வேண்டுமானாலும் போடலாம், அதற்கு இடம் வைத்துத்தான் நாம் வாபஸ் வாங்கி யிருக்கிறோம். ஆனால் திரு. தேவராஜ் அர்ஸ் அவர்களும் திரு. அச்சுத மேனனும், நானும், திரு. கே. எல். ராவும், நம்முடைய தமிழகத்து அமைச்சர் பெருமக்களும் கலந்துகொண்டு பேசிய அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில்,
"Union Government will assist in arriving at such a settlement in six months and in the meanwhile no State will take any steps to make the solution of the problem difficult either by impounding or by utilising water of Cauvery beyond what it is at present என்று வெகு தெளிவாக அன்றைக்கு எழுதி அனைவரும் கையெழுத்துப் போட்டிருக்கிறோம். அதை நான் அனைத்துக் கட்சித் தலைவர்களுடைய கூட்டத்திலே படித்துக் காட்டினேன். அதற்குப் பிறகுதான் வழக்கைத் திரும்பப்