96
காவிரிப் பிரச்சினை மீது
கொண்டார்களா என்றால் இல்லை. அவரவர்களுக்கு அதில் அபிப்பிராய பேதம் இருந்தது. ஆகவே ஒத்துக்கொண்டு, பிறகு நாம்தான் பின்வாங்கி ஒத்துக்கொள்ளவில்லை என்ற வாதம் உண்மையானது அல்ல என்பதற்காக அதைக் குறிப்பிட்டேன். மூன்று மாநில அரசுகளுக்குமே அந்த ஒப்பந்த வரைவுத்தாளைப் பொறுத்தவரையில் அபிப்பிராய பேதம் இருந்தன. ஆகவே அதனை ஒத்துக்கொள்ளவில்லை.
இந்தக் கூட்டத்தில் 100 டி.எம்.சி. தண்ணீரை எப்படிக் குறைத்துக் கொள்வது - என்கிறபோது பதினைந்து ஆண்டுகளில் படிப்படியாகக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஐந்து ஆண்டுகள் - பத்து ஆண்டுகள் - பதினைந்து ஆண்டுகள் என்கிற அடிப்படையில் முதல் ஐந்தாண்டின் முடிவில் 20 டி.எம்.சி. பத்தாண்டின் முடிவில் 60 டி.எம்.சி., 15-வது ஆண்டின் முடிவில் 100 டி.எம்.சி. என்ற அளவில் நீங்களே எங்களுக்கு விடுகிற தண்ணீரைக் குறைத்துக்கொள்ளுங்கள். அந்தக் காலத்திற்குள் நாங்கள் எங்களது கால்வாய்களை மாடர்னைசேஷன் ஸ்கீம் படி நவீனப்படுத்திக்கொண்டு விடுகிறோம் என்பதாகத் தமிழக அரசின் சார்பில் கர்நாடக அரசினிடத்தில் தெரிவித்துக் கொண்டோம். திரு. கே.டி.கே. தங்கமணி அவர்கள் குறிப்பிட்ட தைப்போல மத்திய சர்க்காரும் அந்த மாடர்னைசேஷன் ஸ்கீமுக்கு பண உதவி செய்து தருவதாக ஒத்துக்கொண்டிருக்கிறது. அந்தப் பண உதவியைப் பெற்று மூன்று கட்டத்தில் முதலில் 20 டி.எம்.சி., பிறகு 60 டி.எம்.சி., இறுதியாக 100 டி.எம்.சி. குறைத்துக்கொள்வது என்ற கருத்தைத் தெரிவித்தோம்.
வந்த வழக்கெல்லாம் பொதுப்பணித்துறை அமைச்சர் குறிப்பிட்டதைப்போல அவர்கள் கொடுக்கிற தண்ணீரில் குறைப்பு செய்து கொள்வதா, நாம் பயன்படுத்துகிற தண்ணீரிலா என்பதாகும். பயன்படுத்திக்கொள்கிற தண்ணீரைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்பது பேசுவதற்கு எளிமையாக இருக்கலாம். கேட்பதற்குக்கூட ஆமாம் என்று சொல்லத் தோன்றலாம். ஆனால் இங்கே பயன்படுத்துகிற தண்ணீரைக் குறைத்துக்கொள்வது என்பது நம் மாநிலத்தில் பெய்கிற மழை - அதையும் சேர்த்துச் சராசரிக் கணக்கில்போட்டு குறைத்துக் கொள்கிற நிலைமைக்குப்போகும். ஆகவே 100 டி.எம்.சி. என்கிற போது ஒவ்வொரு ஆண்டும் விடப்பட்ட தண்ணீரின் அளவை
ஆ