உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

97

வரிசையாக எடுத்து ஒட்டுமொத்தமாக சராசரி கணக்குப்போட்டு அதில் 100 டி.எம்.சி. தண்ணீரை அவர்கள் தமிழகத்திற்கு விடும்போதே குறைத்துக்கொள்ளலாம் என்பது நாம் தெரிவித்த கருத்தாகும். அதற்கு அவர்கள் இணங்கி வரவில்லை. முதலில் ஒப்புக்கொண்ட நிலையில் இருந்து நாம் பின்வாங்கவில்லை. முதலில் ஒத்துக்கொண்டது ஒன்று, இப்போது பேசுவது ஒன்று என்று தமிழக அரசைப் பொறுத்தவரையில் இல்லை.

அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு கர்நாடக மாநிலத்தில் எவ்வித கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. பத்திரிகையில் வந்த செய்திகள் எத்தகையன என்பதும் ஒப்பந்தம் முடிவுறாமல் போனதற்கு யார் காரணமாக இருக்கக்கூடும் என்பதும் இந்த அவையும், நாடும் நான்கு அறிந்த விஷயம் என்பதை நான் இங்கே தெளிவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.

திரு. மாரிமுத்து அவர்கள் "இன்னும் பேசி முடிவு காண்பதற்கு இடமில்லாமல் போகவில்லை. ஆனாலும் நடுவர் தீர்ப்புத் தேவை என்று குறிப்பிட்டார்கள். நடுவர் தீர்ப்புத் தேவை என்று அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் போட்டிருக்கிறோம். அதுமாத்திரம் அல்ல. 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தத்திற்கு மாறாக கபினி அணையில் தண்ணீரைக் தேக்கி வைத்திருக்கிறார்கள். தமிழகத்திற்கு இதுவரை அங்கே இருந்து வந்துகொண்டிருந்த தண்ணீர் ரூல்ஸ் அண்டு ரெகுலேஷன் போட்டதற்குப் பின்னால் எவ்வளவு தண்ணீரைவிடுவது அங்கே எவ்வளவு தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்வது என்று தீர்மானிக்கலாம். கபினி தண்ணீர் தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீர் - 1924ஆம் 1924ஆம் ஆண்டு ஒப்பந்தத்திற்கு மாறாக அந்தத் தண்ணீரை அங்கே தேக்கி வைக்காது – அந்தத் தண்ணீரைத் திறந்துவிட வேண்டுமென்று உரிமையின் அடிப்படையில் மத்திய சர்க்கார் இதில் தலையிட வேண்டுமென்று கேட்டிருக்கிறோம். இனி பேச்சுவார்த்தை என்பது - நான் மிக்க பணிவுடன் தெரிவித்துக் கொள்வேன். மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்கிறதோ என்று ஐயம் ஏற்படுகிற அளவு நிலைமை வளர்ந்திருக்கிறது. ஏனென்றால் அந்தத் திட்டங்களுக்கு அந்த அணைகளுக்கு மத்திய அரசு இன்னும் கன்கரன்ஸ் என்கின்ற சம்பிரதாய பூர்வமான சம்மதம் அளிக்கவில்லை என்கிற றிலையில் தவறாகவோ, சரியாகவோ, மறைமுகமாகவோ அந்த