பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழகத்தில் உழவு

இன்றைய உலகம் பலவகையானும் வளர்ந்துளது; புதிய புதிய கண்டுபிடிப்புக்கள், உலக வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்தன துணைபுரிகின்றன. கற்காலத் தில் இருந்த மனிதன், அணுவாற்றல் காலத்திற்கு முன்னேறிவிட்டான் எண்ணெய், நீராவி, மின்ஆற்றல் முதலியன, அவன் உழைப்பைப் பெரிதும் குறைத்து விட்டன; தொழில்வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிகின் றன; என்றாலும், உலகத்தின் அடிப்படைத் தத்துவம் என்றும்போல் ஒன்றாகவே உளது; புத்தம் புதிய கண்டு பிடிப்புக்கள், "மக்கள் யாக்கை உணவின் பிண்டம்' என்ற கொள்கையை மாற்றி அமைத்து விடவில்லை; ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்; இருநாளைக்கு ஏல்என் றால், ஏலாய், ஒரு நாளும் என் நோவு அறியாய்; இடும்பை கூர் என்வயிறே! உன்னோடு வாழ்தல் அரிது என்ற பாட்டிற்கு எதிர்ப்பாட்டுப் பாடும் நிலைமையை உண்டாக்கி விடவில்லை: கல்லைத்தான்், மண்ணைத் தான்், காய்ச்சித்தான்் குடிக்கத்தான்் கற்பித்தான்ா? என்றவர் வேட்கையை நிறைவேற்றவுமில்லை.

இடைக்கால மனிதன், உணவையும், அதற்குக் காரண மாய உழவையும் குறைத்தே மதிப்பிட்டான். ஏன், அறவே மறந்தும் விட்டான். ஆனால், அண்மையில் நிகழ்ந்த உலகப் பெரும்போர்களும், அவற்றின் பின் விளைவுகளும்,