பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 49.

தார் என்பது பதிகத்தான்ும் விளங்குகின்றது என்பது பொருளில் கூற்றாதல் அறிக.

அவ்வாறே, காட்சிக்காதையினும் கூறியுள்ளார் என்பதும் குற்ற மாம் என்க,

அவ்வாறாயின், குன்றத்து நிகழ்ந்தவற்றைக் குற. வரும், சாத்தனாரும் அரசனுக்குக் கூறினர் எனக்காட்சிக் காதையானும், அடிகட்குக் கூறினர் என பதிகத்தான்ும்: பெறப்படுதல், மாறுகோளாம். எனின், அறியாது கூறி வனாய்; என்னை? மலைவளம் காணச்சென்ற அரசன்பால், ஆண்டைய நிகழ்ச்சிகளைக் குறவர் கூற அவன்கேட்டு, வியப்பெய்தியது அறிந்த, அவனுழையிருந்த சாத்தன், அவற்கு முன்னைய வரலாற்றினை விளங்கக்கூறி, அவ்: வரலாற்றினை யொருகாப்பியமாகச் செய்யின், பெரும் பயனுடைய தாகும் எனக்கருதி, அது செய்தற்குரியார், அரசமுனியும், பெரும்புலவரும் ஆய அடிகளே யென்பதை யுணர்ந்து, கண்ணகி வானாடடைந்ததைக் குறவர் கூறக் கேட்- தான்் கூறுதலினும், கண்ட அக்குறவரே கூறல் சிறப்புடைத்தாம் ஆதலின், அவரையும் உடன்கொண்டு. அடிகள்பாற் சென்று கூறினார் எனக்கொள்ளின்,மாறுபடு மாறு யாண்டையதென்க.

இதுகாறும் கூறியவாற்றான், 'இளங்கோவேண். மாளுடனிருந்தருளி' என்ற அடிக்குக் கூறப்படும் இரண் டாவதுரை குற்றமுடைத்தாம் என்பதும், அடிகள், அரச னுழை இருந்தார் என்பது பதிகத்தான்ும் பெறப்படு: கின்றது என்பது பொருளில் கூற்றாமென்பதும், அடி பார்க்கு நல்லார் கூற்றை ஆதாரமாகக் கொண்டு, திரு. மு. இராகவையங்கார் அவர்கள் 'பிற் கூறியதும் பொருந்துவதேயாம்' என்றல் வழுவுடைத்தாம் என்ப தும் பெறப்பட்டவாறு அறிக. ஆன்றோர் உண்மை தனி வார்களாக, - - - -தமிழ்ப் பொழில் 1938-39 பக்கம் : 1.12-115,