பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 காவிரி

குறவர்கள் குன்றத்து நிகழ்ந்தனவற்றை அடிகளுக்கே கூறினார் என்பதை விளக்குதற் பொருட்டே, இளங்கோ அடிகட்கு" (பதிகம்.2) என நான்காம் வேற்றுமை உருபு விரியக் கூறியுள்ளாராதவானும், "செங்குட்டுவன் அதிச யித்து முகநோக்கப் பரிசில் காரணமாக வந்து அவனுழை யிருந்த சாத்தான்்' என்ற சொற்றொடரை, மூலப்பகுதி யில் இல்லாதிருப்பவும், அடியார்க்கு நல்லார் தாமே கொண்டு கூட்டியுள்ளாராதலானும், அவனுழை என்ப தற்கு, அடிகளுழை என்பதே பொருளாமாதலானும், அடி கள் விருப்பு வெறுப்பற்ற ஒருவராதலின், தன்னையும் பிற ரைக் கூறுமாறு போன்றே 'அடிகட்கு' என்றும், "அவ னுழை' என்றும் விளித்துள்ளாராதலானும், "வினைவிளை காலம் என்றீர்...விறலோய் கேட்டி (37-38) என் புழி யும், அவர்க்கு வினைவிளை காலம் என்னையென்று அரசன் வினவவென்க” என்று, மூலப்பகுதியில் இல்லாத அரசன் என்பதனைத், தாமே கொண்டு கூட்டியுள்ளாரா தலானும், இம்மூன்று இடங்களினும், அடியார்க்கு நல்லார் கூறியாங்கு, அரும்பத உரையாசிரியர் கூறாது, வினை முடிபு கூறுங்கால், "......... குணவாயிற் கோட்டத் துக் கடவுளர் முன்னர்த் துறந்திருந்த இளங்கோ அடி களுக்குக்,கண்ணகி வானவர் போற்றத் தன் கணவனோடு கூடியது கண்டு, செங்குட்டுவனுக் குரைத்த குறவர் வந்து, "எல்லாமறிக்தோய்! இதனை” அறிந்தருள்' என்று கூறிப் போக, பின்பு செங்குட்டுவனைக்கண்டு, போக்து அடி களுழைவந்த சாத்தன் அதுபட்டவாறெல்லாம் கூற .....” என்று அரசனுழை, அடிகள் இருந்தாரல்லர் என்பதை விளக்கமாகவே கூறியுள்ளாராதலானும், அடியார்க்கு நல்லார் தாமும், வினைமுடிபு கூறுங்கால், அடிகள் அரசனுழை இருந்தாரல்லர் என்பதை வற்புறுத்தும் நெறி யில் கூறியுள்ளாராதலானும், குறவர் குன்றத்து நிகழ்ந் தன குட்டுவதற்குக் கூறுழி, அடிகள் அரசனுடன் இருந்