பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிரி

"தெய்வக் காவிரி" (சிலம், 10. கட்டுரை. 8). "சோழர் தங்குலக்கொடி'. 'தண்டமிழ்ப் பாவை' "காவிரிப் பாவை’ (மணி. பதி- 23, 25, 12.) என்று சான் றோர்களால் வழங்கப் பெருங் காவிரியாறு, சூரபன்ம னால் துன்புறுத்தப்பட்டு வருந்திய தேவர்கோன் துதல்விழிநாட்டத் திறையோனைப் பூசித்தற் பொருட்டு, ஆக்கிய பூம்பொழிவினை, அவன் வேண்டுகோட்கிரங்கி, வளமுறச் செய்வான் விரும்பிய,முன்னாலுந் துணைக்கரத் தோன், நெடுங்கடலைக் குடங்கையால் முகந்துண்ட குறுமுனிவன் கமண்டலத்தைக் கவிழ்ப்ப, அதினின்றும் பெருக்கெடுத்து வந்தது என்பது ஒரு சாரார் கொள்கை. தன் புதல்வர் இருவரும், வணிகர் மகள், விசாகைக்கும், பார்ப்பணி மருதிக்கும் தீது செய்ய முயன்றார்கள் என்பதனைக் கேட்டு, அவர்களை வாள் கொண்டெற்றி வீழ்த்திய ககந்தனின் தந்தை, காந்தமன் என்பான், அகத்தியனை வேண்டியதன் பயனாக, அவன் கமண்டலத் தினின்றும் போந்தது என்பது மற்று ஒரு சாரார் கொள்கை. இதனை "கஞ்ச வேட்கையிற் காந்தமன் வேண்ட, அமர முனிவன் அகத்தியன் தனாது; கரகங் கவிழ்த்த காவிரிப் பாவை." (மணி. பதி. 10-12) என்று வரும் சொற்றொடர் வலியுறுத்துதல் காண்க.