பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 97

காவல் முதலியன கருதித் தலைமகன் பிரிதலும், பிரிந்த வழிப் பிரிவினால் துன்பம் உளவாகவும் தலைவன் குறித்த காலம் வரும்வரை தலைவி ஆற்றியிருத்தலும், அவ்வாறு ஆற்றியிராது வாய்விட்டுப் புலம்பலும், தலைவன் பரத் தையிற் பிரிந்தான்் எனக் கொண்டு அவனொடு புலத் தலும் ஆய நிகழ்ச்சிகள், அவர்கள் வாழ்க்கையிடையே நிகழ்வனவாகும். அவற்றுள், கூடிய தலைமக்கள் பிரிந்து செல்லும் நிகழ்ச்சியே பாலை என்னும் தலைப்பின்கீழ் ஈண்டுப் பேசப்படும். - 姆

தொன்மையும் செம்மையும் வாய்ந்த உலக மொழிகள் சிலவற்றுள் ஒன்றாய் உயர் தனிச் செம்மொழி எனப் போற்றப் பெறும்,தமிழ்மொழிக்கண், சங்கம் மருவிய நூேல் களாகிய எட்டுத்தொகை நூல்களுள், முதலில் வைத்து எண்ணப்பெறும் சிறப்பு வாய்ந்த கற்றிணை என்னும் நூல் பற்றிய மாநாடு ஈண்டுக் கூட்டப்பட்டுள்ளது: ஆகலின், யானும் பாலைப் பொருள்பற்றி அந் நூலிற் கூறுவனவற்றையே கொண்டு பேசத் தொடங்கு கின்றேன். -

இற்செறிக்கப்பட்ட தலைவி, தலைவனைக் கூடப் பெறாமையால் உடல் மெலிவது கண்டு நோய் நாடி, நோய் முதல் நாடி, அது தீர்க்கும் வாய் நாடி, வாய்ப்பச் செய்யாது இந்நோய் அணங்கால் நேர்ந்தது எனப் பிறழக் கொண்டு வெறியாட்டயர்தல் முதலாயின செய்யத் தொடங்குகின்றாள் தாய். வெறியயர்ந்தும் நோய் நீங்காதாயின், களவொழுக்கம் வெளிப்பட்டு அலர் எழுவதற்கு ஏதுவாம் எனவும், நோய் நீங்கிற்றாயின் நோய்தீர் மருந்தும் உண்டு என அறிந்து த லைமகன் வரையாதே வந்தொழுகுவன் எனவும், அஞ்சுகின்றாள் தலைவி. இந் நிலையில் தோழி தலைவியின் நிலைகண்டு, அவள் உயிர் நிற்றல் வேண்டுமாயின் தலைவனோடு