பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் - 113

பிடத்து ஒடுகின்ற மீன் செல்லும் நெறியைப் போல்த் தாம் இருந்த இடமும் தெரியாமல் அழிந்துபோகும் இயல்புடையது. ஆகவே, கடல் சூழ்ந்த இப்பெரிய உலகையே, அளக்கும் மரக் காலாகக்கொண்டு,எழுமுறை அளக்கப்பெறும் அளவாய்த் திரண்ட பொருளைப் பெறு வதாயினும் அதை விரும்பேன். தலைவியின், செவ்வரி பரந்து அருள் நிறைந்த கண்கள் என் ஆற்றல் அனைத்தை யும் அழித்துவிட்டன; யான் வாரேன்; அப்பொருள் எத்துணைச் சிறப்புடையன ஆயினும் ஆகுக' என்று கூறி மறுக்கின்றான். -

"புணரிற் புணராது பொருளே; பொருள்வயிற் பிரியிற் புணராது புணர்வே; ஆயிடைச் சேர்பினும், செல்லாய் ஆயினும், நல்லதற்கு உரியை, வாழி! என் நெஞ்சே! பொருளே, வாடாப் பூவின் பொய்கை நாப்பண் ஒடுமீன் வழியிற் கெடுவ, யானே, விழுநீர் வியலகம் தூணி யாக . . . . . எழுமாண் அளக்கும் விழுநிதி பெறினும் கனங்குழைக் கமர்த்த சேயரி மழைக்கண் அமர்ந்தினிது நோக்கமொடு செகுத்தனன்; ஏனைய ஆகுக வாழிய பொருளே. (நற். 16)

இவ்வாறு பொருள்வயிற் பிரியத் தலைமகன் மறுத் துரைக்கின்றான். ஆயினும், அவன் நெஞ்சம் மட்டில் பொருள் மேற் செல்லும் விருப்பம் உடையதாய்ப் பொரு ளும் இன்பத்தைத் தரும் இயல்புடையது ஆதலின், பிரிந்து பொருள் ஈட்டுதலும் செயற்பாலதே' என் கின்றது. அது கேட்ட தலைமகன் 'நெஞ்சே! தலைவி யைப் பிரிந்துஈட்டும் பொருளும் இன்பம் தரும் எனின், கூறுகின்றேன் கேள்; இளமைக் காலத்தே பெறலாகும்