பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 13t

வலிதில் முயற்சி செய்தால், உண்மையில் பற்று அறுவதும் இல்லை; மாறாக மிக்கு விளங்குகின்றதுடு

இயற்கையோடு இயைந்து இன்பம் செறிந்த வாழ்க் கையினையே வள்ளுவர் விழைகின்றார். ஆதலின், அவர் இல்லறத்தின் வழித்தாகிய துறவறமே சாலச் சிறந்தது என்ற நோக்குடையராய், இல்லறத்தின் பின்னரே துறவினைக் கூறுவதோடு அமையாது,

"அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின், புறத்தாற்றில்

போஒய்ப் பெறுவது எவன்? -

"இயல்பினால் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்,

முயல்வாருள் எல்லாம் தலை."

“ஆற்றின் ஒழுக்கி, அறன் இழுக்கா இல்வாழ்க்கை,

நோற்பாரின் நோன்மை உடைத்து”

துறந்தாரின் தூய்மை உடையா; இறந்தார்வாய்

இன்னாச்சொல் நோற்கிற் பவர்."

- 'உண்ணாது நோற்பார் பெரியர்; பிறர்சொல்லும்

இன்னாச்சொல் நோற்பாரின் பின்." -

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல்; அப்பசியை

மாற்றுவார் ஆற்றலின் பின்." .

என்ற தம் அழகிய குறள்வெண்பாக்களினால் அவ்வில்ல றத்தின் பெருமையினை வாயார வாழ்த்துவாராயினர்.

-செந்தமிழ்ச் செல்வி: 1942-43) பக்கம்: 298:-301