பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் - 133

கள் நிகழுகின்றன: நிலவொளி வீசி எழும் முழுத்திங்கள், உலகில் உள்ள எல்லா உயிர்க்கும், ஒத்த காட்சியையே அளிக்கின்றது என்றாலும், அதைக் காணும் அரசன் உள்ளம், பகைவர் நாடு மீது படையெடுத்துச் செல்ல இக் காலம் எத்துணை நல்லகாலம் என எண்ணுகிறது: உழவன் உள்ளம், பயிர்களுக்கு இளைப்பின்றி நீர்பாய்ச்ச இன்பம் அளிக்குமே இக்காலம் என எண்ணுகிறது; கள்ளர் உள்ளம், தம் தொழிலைத் தடை செய்கின்றதே இந்நிலவொளி எனத் திங்கள் மீது காய்கின்றது, இளைஞர் உள்ளம், மணல் வீடு கட்டி விளையாடத் துள்ளுகின்றது; ஆடியும், பாடியும் இன்பம் துய்ப்பதற் குரிய இன்பக்காலம் இக்காலம் எனக் களிப்பெய்தும் பிரி யாது கூடி உறையும் தலைமக்கள் உள்ளம்; "உங்கள் இளம்பிறையால் எங்கள் இளங்கொடிதான்் எத்தனை கோடி யிரா இப்படி வாடுவதே எனத் துயருறும், பிரிந்துறையும் தலைவியின் தோழி உள்ளம். மேலும். அறிவு, உருவு ஆய எல்லா நலனும் அமையப் பெற்ற இளம்பெண் ஒருத்தியைக் காணும், காவியப் புலவன் உள் ளமும், ஒவியப் புலவன் உள்ளமும், காமுகன் உள்ளமும் ஒன்றாக இருக்கமுடியுமா? மணமகனைப்பற்றி ஆராயுங் கால், மணமகள் தந்தை, அவன் கல்வியின் பெருமையை எண்ணுகின்றான்; அவன் தாய் அவன் செல்வப்பெருக்கை எண்ணுகிறாள்; அவள் சுற்றம், அவன் குல நலனை எண்ணுகிறது; மணமகள் உள்ளம் அவன் வடிவழகை எண்ணுகின்றது. இவ்வேறுபாடு அவர்தம் மனவேறு பாட்டை அன்றோ அறிவிக்கின்றது. ஒருவர்பால் குணம் உண்டு எனினும்,கீழ் மக்கள் அவர்பால் உள்ள அவர்தம் சிறு குற்றத்தைக் கொண்டு புகல்வது, அக்கீழோர் தம் ஆருத்துக் கீழ்மையால் அன்றோ?

இனி, இவ்வாறு காணப்படும் ஒரே பொருள், காண் பார் தம் தகுதிக்கேற்ப, அவர்தம் உள்ளத்தே பல்வேறு

sm'—9