பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 9

இத்தகைய நிலங்களைக் கடந்து, காவிரி,பலசிற்றுார் களையும், விளை நிலங்களையும் மெல்லக்கடந்து, ஒரு காலத்தில் மக்களும், விளைபொருளும் மிக்கு, புகழ் வாய்ந்த, காவேரி புரத்துக் கணவாயை அடைகின்றது: இக்கணவாயின் தலைப்பக்கம் பழமை வாய்ந்த கோயில் ஒன்று இருந்து, வழிப்போவார் பலர்க்கும் தங்குமிடமாக அமைந்துள்ளது. மலைநாட்டிற்குச் செல்ல வேண்டியோர் இக்கணவாய் மூலமாய்த்தான்் சேறல்வேண்டும்:

காவிரி, தன் மலைநாட்டுப் பிரயாணத்தை ஈண்டு தவிர்ந்து செல்லுழி, இதன் நடுவண் சிறிய ஆற்றிடைக் குறைகள் பல உண்டாகின்றன. ஆற்றில் நீர்குறைந்து, இருப்புழி மாந்தர் பலர், அந்திவானின் அழகையும், மன்னவர் கன்னியராய் மங்கள மங்கையராய், நல்ல வாழ்வினராய், திங்கள் நிறைந்து வரும் மைந்தர் வயிற்றி னராய் சேய்இழையார் நடைபோல் அசைந்து வரும், இளந்தென்றலின் இன்பத்தையும் நுகர்வான் வேண்டி, மயில்பெடையைப்புல்லி யால, மணல் மேல் மடஅன்னங் கள் பல மல்க, பெடைவண்டுகள் பண்செய, குயில் பெடையோடு பாட சிறப்புற்று விளங்கும் இவ்வாற்றி டைக் குறைகளுக்குச் செல்வர். -

காவிரி இன்னணம் நான்கு காவதம் கடந்து செல் லுழி பவானி (a) என்னுமிடத்தில், (b) யெனப் பெயரிய 'நீல கிரியினின்றும் வரும் மற்றும் ஒரு சிற்றாறு இதனுடன் கலக்கின்றது. இவனின்றும் மைல்கள் சில கடந்த பின்றை ஈரோட்டிற் கருகில் தென்னிந்திய இருப் பும் பாதை ஒன்று, இதனைக் கடக்கின்றது. - * (a: 1924-ஆம் ஆண்டில் வந்த வெள்ளப் பெருக்கி னால் இவ்வூரின் பல பாகங்கள் சிதைவுற்றன.

(b) இதனைப் பவானியாறு என்றும் வழங்குவர்.