பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 estr gístif”

இவ்விடத்தினின்றும் காவிரி, ஐந்து காவதம் ஒடக் கரூர்க்கருகில் ஆனைமலையினின்றும்,போந்த அமராவதி என்னும் ஆற்றினை உடன் சேர்த்துக் கொண்டு ஒருமைல் அகலமுடையதாகிறது.

பின்னர், காவிரி காவதம் சென்று இரு பிரிவிற்றாகி பூரீரங்கத்தை மூன்றாவது ஆற்றிடைக்குறை யாக்கு கின்றது ஈண்டு இவ்வாற்றிடைக் குறைக்குத் தென் பால் உள்ள பிரிவு, காவிரியெனவும், வடபால் உள்ளது கொள்ளிடம் எனவும் பெயர் பெறும். உயரிடத்தில் ஒடும் காவிரியின் நீர் அனைத்தும், கொள்ளிடத்தில் போகாத வாறு, இவ்விரண்டும் பிரியுமிடத்தில் கொள்ளி டத்தில், ஏழு அடி உயரமும், எண்ணுாறு அடி நீளமும் உள்ள, கற்சிறை (அனை) ஒன்று கட்டப் பெற்றுள்ளது.

இவ்வாற்றிடைக் குறைக்குச் செல்லுமாறு, அவ்விரு பிரிவிலும், இரண்டு சேதுக்கள் கட்டப் பெற்றுள்ளன. இத் துருத்தி முற்றிலும், மா பலா போன்ற கனிநிறை மரங்களும், கோங்கம், வேங்கை போன்ற மலர் நிறை மரங்களும், நெல், கரும்பு, சோளம் போன்ற விளைநிலங் களும் நிறைந்து விளங்கும். இதனிடை இருபத்தைந்து அடிஉயரமும் நான்கடி அகலமும் உள்ள ஏழுமதில்கள், ஒவ்வொன்றினுக்கும் இடை முன்னூற்று முப்பத்தாறு அடி இடைவெளியுடன், தாமரைமலரின் இதழ்கள் போன்று, அமைந்து விளங்குகின்றன. இவ்வெயில்களின் நடுவண், தாமரைப் பொகுட்டென நிற்பது, மூவுலகை சரடியால் அளந்துயர்ந்த முகுந்தன் கோயில். இக்கோயி வின் உள்ளே நீலமேகம் நெடும் பொற் குன்றத்திற் படிந்தது போல, ஆயிரமாக விரித்தெழுந்த தலையினை யும் அருந்திறலையுமுடைய பாம்பணைப் பள்ளிமீது, தேவரும் பிறரும் போற்ற, கிடந்தருளும் நெடுமாலின்