பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 161

நிலம் ஆற்ற விளைய வேண்டும்; நிலம் ஆற்ற விளைய வேண்டுமாயின், இயற்கையாலோ அன்றிக் செயற்கை யாலோ உண்டாம் கேடுகள், ஆண்டு இல்லாதிருத்தல் வேண்டும்; நாட்டைப்பற்றித் திருவள்ளுவர் கொண்ட முடிபுகள் இவை; இதில், உணவிற்கு எத்துணை உயர்வு கொடுக்கப்பட்டுளது என்பதை நோக்குங்கள்:

- நாட்டில், விளைவு மிகுந்திருக்க வேண்டும் என்பதை உணர்ந்த அவர்கள், பயிரிடத்தக்க நிலம் மிகுதியாக வேண்டும் என்பதையும் உணர்ந்தேயிருந்தனர்; அது குறித்து, அக்காலத்தே பரந்து கிடந்த காடுகளை அடித்து நாடாக்குவதை அரசர்கள் தங்களுடைய இன்றி யமையாக் கடமையாகக் கருதினர்; கருதியதோடு நில்லாது, அவ்வாறு காடுவெட்டி நாடாக்கிய அரசர் களைப் பாராட்டியும் வந்தனர். காடுவெட்டி நாடாக்கி விட்டதினாலேயே நிலம் விளைந்துவிடும் என்ற குருட்டு நம்பிக்கை இல்லாதவராய், நிலம் வளமாதற்கு வேண்டிய நீரின் இன்றியாமையை உணர்ந்து, இயற்கை நீர்வளம் உள்ள இடங்களில் அவற்றின் துணை கொண்டும், அவை அற்ற இடங்களில், குளம்வெட்டி அவற்றின் துணை கொண்டும், அந்நிலங்களின் வளத்தைப் பெருக்கினர். 'காடுகொன்று நாடாக்கித், குளம்தொட்டு வளம் பெருக்கி" என்பது அவ்வாறு நாடுகண்டு வளமாக்கிய பேரரசன் ஒருவனைப் பாராட்டிய பட்டினப்பாலைப் :பகுதியாகும். 'உணவெனப்படுவது நிலத்தோடு நீரே; நீரும், நிலனும் புணரியோர், சண்டு உடம்பும், உயிரும் படைத்திசினோரே' இ..து உடம்பையும், உயிரையும் வளர்க்க வேண்டின், நிலவளமும், நீர்வளமும் பெருகச் செய்தல்வேண்டும் என அரசன் ஒருவனை நோக்கிக் கூறிய அறவுரை. -

பலதுறையினும் வளர்ச்சியுற்றிருக்கும் இந்தக் காலத்திலும், மக்கள் தங்கள் நிலத்திற்கு வேண்டிய