பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 15%

இவ்வுண்மையை ஆராய்ந்து வந்தனர். ஆங்கே, நெடிய இருப்புப் பாரை ஒன்றை நிறுத்தி கூரிய மழுவேந்திய ஒருவனை அவண் நியமித்து மின்னெழும் பொழுது அம் மழு நுனியைப் பாரையின் முடியிற்பட நிறுத்துமாறு: பணித்தனர். அவன், இடிமின்னுக்களின் பயனாக, அவற் றின் கண் தீப்பொறி பறக்கக் கண்டு, காணுந்தோறும் தன் கைம் மணியை இயக்குவன். இங்ங்ன் புயலிடைப் பெறப் LGib Guaif lélair&mprósp;5 to (Atmospherical electricity) பெரிதும், ஆராய்ந்துகண்ட பேராசியர், கிராஸ் (Prof. Crosse) என்பவராவர்.

கட்புலன் செறியத் தோன்றுங் கால், பற்பல கதிர் களாகப் பிரிந்து பாய்ந்து எழும் மின்னுக்கள், வளியிற். செறிந்துள்ள அணுக்களின் வழியே வெளிப்போதருவன வாம். அவ்வளியணுக்கள் ஒரு நெறியினவன்றிக் கோணி வளைந்து கிடத்தலின், மின்னலும் முறுக்குண்டு மிளிரும்: பூங்கொடி போலத் தோன்றுவதாயிற்று. மழையினம், இமைப்பது போலவும், அங்காப்பது போலவும் தோன்றும் அகனிலை மின்னல்கள், மிக்க சேய்மைக்கண் உடலும் : புயன் மின்னலின் நிழலென அறிக.

முழவொலி போல உருண்டோடும் முழக்கினை யுடைய இடியேற்றொலி, முகிலனஞ் செய்யும் எதிரொலி (Echo) யாகும். இதன் வன்மை மென்மைகள், எதிரொலி செய்யும் எழிலித்திரளின் இயல்பின் அமைந்தன. சுவிட்சர்லாந்திலுள்ள ஒரு மலைக்குவட்டுமிசை சென்ற இருவர், தாம் நின்றவிடத்தே வலிய முகிலினம் தழுவி மறைத்துக் கோடல்கண்டு, தம் கையகத்திருந்த துப்பாக்கியை வெடித்தனர். வெடித்தார்க்கு, அவ்வெடி யொலி முகி ற்குழாங்களால் எதிரொலிக்கப்பட, பேரிடி யேற்றின்பெருமுழக்கென முழங்கி, அம்மலையகமெங்கும். விதிர்ப்புறச் செய்ததாம். பின்னர், அவர், துப்பாக்கி,