பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 காவிரி

யாமாதலானும், வதிந்த என்பது பிழைபடு பாடமாதல் அறிக. இனி துணையொடு வதியும் என்புழியும், வதியும் இயல்பினவாயினும், அவன் வருவழி வதிந்தனவோ? ஆன்றோ? என்னும் ஐயம் நிகழ்தலின், வதியும் என்பதைக் காட்டினும் வதிந்து என்பதே நேரிய பாடமாதல் அறிக:

இனி, மணிநா வார்த்த' என்றவிடத்து, ஆர்த்த என்பது சப்தித்த என்றும் பொருள்படுதலானும், திரு. வே. சாமிநாதையர் அவர்களும், “யாத்த’ என்றே கொண்டார் ஆதலானும், இருபொருள்படும் அப்பாடம், கொள்ளுதலினும், அகநானுாற்றினுள் காட்டப்பெற்ற யாத்த என்ற பாடத்தைக் கோடல் நேரிதாம் என்க.

2. இனி, "மாயோன் மேய காடுறை யுலகமும்’ (தொல் பொருள் 5) என்ற சூத்திரத்தின்கீழ், பக்கம் 21-ல், "இனி, முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற முறை யென்னை யெனின். இவ்வொழுக்கமெல்லாம். இல்லறம் பற்றிய ஒழுக்கமாதலின், கற்பொடு பொருந்திக் கணவன் சொற்பிழையாது இல்லிருந்து கல்லறஞ் செய்தல் மகளிரது இயற்கை முல்லையாதலின், அது முற்கூறப். பட்டது." என்ற வாக்கியம் ஒன்று அமைந்துள்ளது. இதனுள், 'கற்பொடு பொருந்திக் கணவன் சொற்பிழை யாது இல்லிருந்து நல்ல றஞ் செய்தல் மகளிரது இயற்கை முல்லையாதலின் அது முற்கூறப்பட்டது." என்னும் சொற்றொடர் அமைதி பெறவில்லையாதலின், பொரு ளும் இனிது விளங்கவில்லை யாதலானும், அதனை, கற்பொடு பொருக்திக் கணவன் சொற்பிழையாது. இல்லிருந்து கல்லறஞ்செய்தல் மகளிரது இயற்கை." என வாக்கியத்தை,முடித்து, "அது முல்லையாதலின் முற்கூறப் பட்டது” என மாற்றிப் பொருள் கொள்ளின் நன்றென

நான் கருதுகின்றேன். - .