பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 3 #4

அவர்தம் உரைகள், அழகர் உரையினும் சிறந்து விளங்கும்" என்பதில் எட்டுனையும் ஐயமின்றறே? எனினும், நாம் செய்த தவக்குறைவால், நம்மொழி செய்த தவக்குறை வால், நம் நாடு செய்த தவக்குறைவால்,அவைகள் கிட்டா வாயின. கழிந்தன உள்ளி கருத்தழிவதால் யாது பயன்?" “Let the dead past bury its dead” orgă List -gã & Goto புலவரும். யாம்செய்தது எற்றென்று இரங்குவ செய்யாது, மற்றன்ன செய்யாமையன்றோ நாம் செயற்பாலன ஆதலின், இறையருளாற் கிட்டிய இவ்விரு உரைகளை யேனும் போற்றுமுகத்தால் அவற்றைச் சிறிது ஆராய்வல்:

பாயிரம், பொதுவும் சிறப்பும் என இரண்டாம். நூல். நூலாசிரியன்,துவலும்திறன், மாணவன்,கொள்ளுந்திரன் என்ற ஐந்தினையும் தெரிவிப்பது பொதுப்பாயிரமாம். ஆக்கியோன், அதன் முதனூல், நூல்வழங்கும் எல்லை இவை கேட்டற் பின்னர் இதுகேட்கற் பாற்று என்னும் யாப்பு, கேட்போர், நுதலிய பொருள், அந்நூல் கேட்ட லால் உண்டாம் பலன் என்ற எட்டினையும் உணர்த்துவது. சிறப்புப் பாயிரமாம்.

கூறப்பட்ட இவை இரண்டனுள், ஒன்றையேனும் பாயிரம் எனத் தலைப் பெயர்பெற்ற, கடவுள் வாழ்த்து வான் சிறப்பு, நீர்த்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்ற நான்கனுள் ஒன்றேனும் கூறிற்றில்லை ஆதலானும். பரிமேலழகரும், தாம் கூறிய உரைப்பாயிர இறுதியில் 'இல்லறத்தின் இலக்கணங்கூறி அதனை (இல்லறத்தை). முதற்கண் கூறுவான் தொடங்கி, எடுத்துக்கொண்ட இலக்கிய மினிது முடிதற்பொருட்டுக் கடவுள் வாழ்த்துக் கூறுகின்றார்" என்று கடவுள் வாழ்த்து என்றே கூறினார். ஆதலானும், மணக்குடவரும் பாயிரம் என்பது பற்றி ஒன்றும் கூறினாரில்லை யாதலானும், திருக்குறளுக்கும்.