பக்கம்:காவிரி (கட்டுரைகள்).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர். கா. கோவிந்தன் 37

என்ற செய்யுளை உட்கொண்டவராய் சொல்லினானே பொருள் அறியப் படுமாதலான், அதனைக்கற்கவே மெய் யுணர்ந்து வீடு பெறலாகும்; மீண்டும் வணக்கம் கூறியது. எற்றுக்கென்றாற்கு, இஃது, அதனாற் பயனிது என்பது. உம், வேறு வேறு பயனில்லையென்பது உம் கூறிற்று” என்று மணக்குடவர் கூறியதனை, பரிமேலழகர், 'ஆகம அறிவிற்குப்பயன், அவன்தாளைத் தொழுது பிறவியறுத்த லென்பது இதனாற் கூறப்பட்டது” எனச் சுறுங்கிய வாய்பாட்டாற் கூறினார். .

3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடு வாழ்வார்"

இக்குறளில் மலர் என்பதற்கு, "மலர் எனப்பொதுப்படக் கூறிய அதனான், மலர் எல்லாவற்றினும் சிறந்ததாகிய, உள்ளக் கமலம் என்றும், நிலம் என்பதற்கும் அவ்வாறே பொதுப்படக் கூறிய அதனான் எல்லாநிலத்தினும் சிறந்ததாகிய வீட்டுலகம்” என்றும்பரிமேலழகர் பொருள் கூறியது எல்லாரானும் போற்றற்குறியதேயாம். திருக் கோவையாரின் முதல் செய்யுளில், கோங்கம் என்பதற்கு அடை கொடாதது கொண்டு,பேராசிரியர் கூறிய உரையும் ஈண்டு நோக்கற்பாலது. பரிமேலழகர், இவ்வாறு பொருள் கொண்டதை அறியமாட்டாது, "அவர் மிசைநிலம் என மாற்றி, மேலுலகம் எனப்பொருள் கொண்டார்" என்று பின் வந்த தண்டபாணி தேசிகர் மயங்குவாராயினர், உள்ளத்தை மலர் எனக்கூறுதலை, 'தாளென்னும் புண்டரீகம் அகமலரில் வைத்துப் போற்றும் பொற் பினான்” (பெரி, பெருமிழலை, 3) என்று வருதலானும் அறிக. இனி, இதற்கு மணக்குடவர், நிலம் எனப் பொதுப் படக் கூறிய அதனான், இவ் உலகின் கண்ணும் மேலுலகின் கண்ணும் என்று கொள்ளப்படும் என்று பொருள் கொள்வர். "ஏகினான” என்று இறந்தகால வாய்

sт–3