பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O. 10 1

மாடுகள் பசுக்கள் எருமைகள், ஆடுகள் கோழிகள் பன்றிகள் ஆகிய கால்நடைகள் இந்திய விவசாயப் பொருளாதாரத் தில் கிராமாந்திரப்பொருளாதாரத்தில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கின்றன. உழவு வேலைகள், வண்டி போக்குவரத்து முதலியவைகளுக்கு மாடுகள் அவசியம். அத் துடன் பால், தயிர், மோர் வெண்ணெய், நெய் முதலிய உணவுப் பொருள்களுக்கும், நமது நாட்டின் நிலத்திற்கு மிகவும் அவசியமான தொளி உரத்திற்கும் கால்நடைகளின் சாணம் மிகவும் முக்கியமானது. தொழு உரத்தின் மூலம் தான் நிலத்திற்குத் தேவையான உயிர் அணு உரம் அதிக மாகக் கிடைக்கிறது.கால்நடைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. மறுபக்கம் உழவு மாடுகளின் தேவை யும் அதிகரித்து வருகிறது.

நவீன உழவு கருவிகளின் விலையும் பராமரிப்புச் செலவும் அதிகரித்தும், உழவு மாடுகளின் பற்றாக்குறை அதிகரித்தும் சாகுபடியில் நெருக்கடியை உண்டாக்கியிருக்கிறது.

நான்காவதாக உரம் பற்றி ஏற்பட்டுள்ள நெருக்கடி யாகும். ரசாயன உரம் நமது விவசாயத்தில் முக்கிய இடம் பெற்றிருக்கிறது. உற்பத்தியை அதிகரிப்பதற்கு ரசாயன உரம் மிகவும் அவசியமாகும். இந்த அவசியத்தை இந்திய விவசாயிகள் நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள் ஆரம்பத்தில் உர உற்பத்தி ஆலை முதலாளிகளும் சரி, அரசும் சரி ரசாயன உர உபயோகத்தை ஊக்குவித்தார்கள். அதன் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இப்போது ரசாயன

உரத்தின் விலையும் அதிகரிக்கப்பட்டு விட்டது. அதன் தரமும் குறைந்து விட்டது. ஆலை முதலாளிகள், அதில் பெரும்பாலும் பன்னாட்டு கூட்டு நிறுவனங்கள் திட்ட மிட்டு ரசாயன உரங்களின் விலையையும் உயர்த்தி,

தரத்தையும் குறைத்து விட்டார்கள். அரசு அந்த ஆலை முதலாளிகளுக்கு அனுசரணையாகவே இருக்கிறது.

அடுத்தபடியாக இப்போது நிலத்திற்கு இடப்படும் தழை உரம், தொளிஉரம் முதலிய உயிர்அணு உரங்களில் அளவு குறைந்து விட்டது ஏற்கெனவே பலகாலமாக நிலப்பிரபுத் துவ ஏகாதிபத்திய சுரண்டல்காரணமாக ஏழ்மைப்பட்டிருந்த விவசாயிகள் நிலத்திற்கு உரமிடுவதில் பலவீனமடைந்து நிலத்தின் சாரம் பல இடங்களில் குறைந்திருக்கிறது, இப் போது தீவிரசாகுபடி ஏற்பட்ட பின்னர் புதிய செய்முறை கள் ரசாயன உரம் போன்றவைகளினால் உற்பத்தி அதிக ரித்தது. இப்போது ரசாயன உரம் உயிரணு உரம் ஆகிய வற்றின் விகிதாசார ஏற்றத் தாழ்வின் காரணமாக எதிர் நிலை விளைவுகளும் ஏற்பட்டு வருகின்றன.

அத்துடன் காடுகள், மரங்கள் அழிக்கப்படுவதன் காரண மாக தழை உரம் கிடைப்பதும் குறைந்து வருகிறது. கால்