பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி . .

குளம் கண்மாய்கள், இதர நீர் நிலைகளும் பாழடைந்து கிடப்பதால் மழை பெய்தாலும் தண்ணிர் நிறுத்தப்படாத தால், நீர் ஊற்றுகள் பாதிக்கப்பட்டு நின்று விட்டன.

வட்டி, கட்டணம், விலைகள் காரணமாய் இந்தப் பகுதி விவசாயிகள் மீது நடத்தப்பட்ட கொடுமைக்கு அளவே இல்லை. அதனால் அவர்களிடம் ஏற்பட்ட வெடிப்பு பற்றி அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம். தமிழகத்தின் முக்கிய நீர்ப்பாசனப் பகுதிகளில் ஒன்றான கிணற்றுப் பாசனம் இவ்வாறு, நிலத்தடி நீர் ஊற்று பாதிப்பு, மின்சார பற்றாக்குறை, மின் கட்டன்னம், மின் சார சாதனங்கள், கருவிகள், உபகருவிகளுக்கான விலை உயர்வு முதலிய காரணங்களால் கடுமையான நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்திலும் இத்திய நாட்டிலும் ஏற்பட்டுள்ள நீர்ப் பாசன நெருக்கடி பெரும்பாலும் செயற்கையான நெருக் கடியாகும். முதலாளித்துவ உற்பத்தி உறவுகளின் பிற்போக்கான தன்மைகள், அதனால் உண்டாகி யுள்ள தடைகள் தான் இந்த நெருக்கடிக்கு முக்கிய காரணங்களாகும். o

மூன்றாவதாக உழவுகருவிகள், உழவு மாடுகளின் பற்றாக் குறையால் ஏற்பட்டுள்ள பற்றாக் குறையும் நெருக்கடியு மாகும். == o

உழவுகருவிகள் நவீன உழவுகருவிகள் இந்திய விவசாயத்தில் வரத் தொடங்கி அவை வளரும், சக்தியாக இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட் டிராக் டர்கள், டெம்போக்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. இந்த எண்ணிக்கை மேன்மேலும் அதிகரித்துக் கொண்டிருக் கிறது. ஆயினும் டிராக்டர்களை வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு சிறிய நடுத் தர விவசாயிகளுக்கு பொருளாதார பலம் இல்லை. வாடகைக்கு பிடிப்பதற்கும், வாடகையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அத்துடன் டிராக்டர், டெம்போக்களின் வில்ை டீசல் விலை உபகருவிகள் விலை ஆதிகரித்து கொண்டிருப்பதால் உழவு செலவு அதிகரிக் கிறது. அதுசிறிய நடுத்தர விவசாயிகளுக்கு கட்டு படியாகாத நெருக்கடியாகவளர்ந்து கொண்டிருக்கிறது.

டிரக்டர்கள் நாளுக்கு நாள் அதிகமாக செயல்பாட்டிற்கு வந்திருந்தாலும், நமது நாட்டின் விவசாயத்தில் மாடுகளின் பயன்பாடு எந்தவிதத்திலும் குறையவில்லை. சாகுபடி நிலத் தின் ஆளவும், இரண்ட்ாவது சாகுபடியும் அதன் அள்வும் அதிகரித்து வருவதால் உழவு கருவிகளின் தேவையும் மாடு களின் தேவையும் அதிகரித்து வருகிறது. மர்டுகள் நமது நாட்டு விவசாயத்தின் மிகவும் முக்கியமான உற்பத்தி சக்தி யாகவே தொடருகிறது