பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி . .

விவசாயிகள், உரம் வாங்க, மருந்து வாங்க, விவசாயத்

திற்குத் தேவையான மின்சார சாதனங்கள் வாங்க,

ங்கள் விவசாயக் கருவிகளைப் பா பார்க்க, ங்கள் த ரு விவசாயப் பொருள்களை சந் தைக் கொண்டு ோய்

2 o

விற்று வர பஸ்களில் போக வேண்டும். பஸ் கட்டணம் உயர்ந்து கொண்டேயிருக்கிறது. அதன் காரணமாகவும் விவசாயச் செலவும் அதிகரிக்கிறது.

நில வரி, தண்ணிர்வரி, அதற்கான செஸ்கள் உபரிசெஸ்கள் உயர்ந்து கொண்டேயிருக்கிறது. நிலவரி இன்றைய அாசுக ளின் பட்ஜெட்டில் சிறிய பகுதி தான். இருப்பினும் நில வரி அதன் உபரிவரிகள் தொடருகின்றன. அதனால் விவசாயி களுக்குப் பிரதிபலன் எதுவும் இல்லை. அந் தவரிப்பணத்தை வைத்து அரசு துப்பாக்கிகளையும் கடிகளையும் வாங்கி விவசாயிகளை மிரட்டவும், சுடவும் அடிக்கவும்தான் பயன்படுத்தியிருக்கிறது.

ஏழாவதாக, எல்லாவற்றி ற்கும் மேலான பிரச்சனையாக உள்ளது. விவசாயிகளின் விளை பொருளுக்குரிய விலை இல்லாமையாகும், விவசாயிகளின் விளைபொருளுக்குக் கட்டுபடியாகும் விலை இல்லாமையால் ஏ ற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றி ஏற்கெனவே முந்திய அத்தியாயத்தில் கூறப்பட்டிருக்கிறது .

முதலாளித்துவ முறையில் தொழிற்சாலையில் உற்பத்தி யாகும் பொருள்கள் அனைத்தி ற்கும் உற்பத்திச் செலவைக் கணக்கிட்டுலாபத்தை வைத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது.

விவசாயிகள் விவசாயத்திற்கு வாங்கும் பொருள்கள் அனைத்திற்கும் நிர்ணய விலை இருக்கிறது. DT&FrTULfGMT உரம் வாங்குகிறோம் என்றால், அது ரசாயனத் தொழிற் சாலையின் நிலம், கட்டிடம், எந்திரங்கள் ஆகியவை

களுக்கான முதலீடு அதற்கான வட்டி, மூலப்பொருள் விசை சக்திக்கு ஆகும் செலவு உழைப்பு சக்தி, நிர்வாகம் ஆகியவற்றிற்கான செலவுகள் அதற்கான தொகை அதற் கான வட்டி, மூலப் பொருள் முதலியவை வாங்குவதற்

கான கமிஷன் செய் பொருள் விற்பனைக் கமிஷன், நடப்பு செலவுகளுக்காக, ஸ்டாக்கிற்காக, வங்கிகளிட மிருந்து வாங்கியுள்ள பணம் அதற்கான வட்டி, வருமான வரி, விற்பனை வரி, தொழிற்சாலை நிர்வாகம்,

பராமரிப்பு செலவுகள் முதலிய அனைத்தையும் கணக்கிட்டு, உற்பத்திச் செலவைக் கணக்கிட்டு அதற்கு மேல் லாபத்தை வைத்து ரசாயன உரத்தின் விலை நிர்ணயிக்கப் பட்டு மார்க்கட்டிற்கு வருகின்றது. உர மூட்டைகளின் விலைகள் அச்சடிக்கப்பட்டு விடுகின்றன.

இதே, போல் நாம் வேறு எந்தப் பொருள், வாங்கினா லும், துணி, சர்க்கரை, மின்சார பல்பு, எண்ணெய்,