பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் 0 1 19

செய்து மீன்பிடித் துறைமுகங்கள் கட்டப்பட வேண்டும் நவீன படகுகள், சிறு கப்பல்கள், பெரிய ஆழ்கடல் மீன் பிடிக்கும் கப்பல்கள் ஆகியவற்றின் மூலம் மீன் பிடித்தலை அதிகப்படுத்த வேண்டும். மீன் பதனிடும் தொழிற் சாலை கள், ஐஸ் உற்பத்தி,டப்பாக்களில் மீன் அடைக்கும் தொழிற் சாலைகள் முதலியன மூலம் அதிகமான வேலை வாய்ப்புகள் பெருகும்; மீன் உற்பத்தி பெருகும். மக்களுக்கு மிகவும்அவசிய மான மீன் உணவும் அதிகமாகக் கிடைக்கும்.

மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வரு வாய் அதிகரிக்கும். அத்தகைய வளர்ச்சி மூலம் தான் மீன வர்களின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படும்.

இன்று பல மீனவர் குடியிருப்புப் பகுதிகளிலும் மீனவர் கூட் டுறவு அமைப்புகள் இருக்கின்றன. அந்தக் கூட்டுறவு அமைப்புகளை படிப்படியாக அபிவிருத்திசெய்து, தொழிலை படிப்படியாக நவீனப்படுத்தி வளர்க்கவும், அரசுத்துறையில் பt ன் பிடித்துறை முகங்களை நிர்வகிக்கவும். விற்பனையை அரசு எடுத்துக்கொள்ளவும் திட்டமிடப்பட வேண்டும்.

மீனவர்களுக்குள்ள மிகமுக்கியமான பிரச்சனைகளில் ஒன்று சமூகப்பாதுகாப்புப் பிரச்சனை யாகும். விபத்துக்களி ருந்து பாதுகாப்பு, நோய்வாய்ப்பட்டால்-வயதாகி விட்டால் பாதுகாப்பு, தொழில் கம்மியாகி வேலை

குறைந்து விட்டால் அவர்களுக்கு ஊதிய உத்தரவாதம் போன்ற பிரச்சனைகள் மிகமுக்கியமானதாக உள்ளன.

மீனவர்கள் இப்போது பெரும்பாலும் சாதிமத அமைப்புக் களின், சமூகக் கட்டுப்பாடுகளின் கீழ் உள்ளார்கள். அவர் களை சாதி மத வேறு பாடின்றி. கூட்டுறவு அமைப்புகளில் கொண்டு வந்து அவர்களுடைய பொது வாழ்க்கையில் ஜனநாயகத் தன்மை வளர்க்கப்பட வேண்டும்.

உள்நாட்டு நீர் நிலைகளில் மீன் வளர்த்தல், கழிமுகங் களில் இரால் வளர்த்தல் முதலியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்.

அத்துடன் மீன்பிடித்தல், பதனிடுதல், விற்பனை செய்தல் சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர் களை தொழிற்சங்க அடிப்படையிலும் திரட்டி அவர் களுக்கிடையில் உள்ள உற்பத்தி உறவுகளை சீரமைக்க வேண்டும். அவர்களுடைய வாழ்க்கையில் ஜனநாயக மறு மலர்ச்சி ஏற்படுத்த வேண்டும்.

உப்பளத் தொழில்:

கடலைச் சார்ந்த மற்றொரு _ முக்கிய தொழில் உப்பு உற்பத்தித் தொழிலாகும்.