பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி...

கல்லை மூலப் பொருளாகக் கொண்டு நடைபெறும் தொழில்கள், தயாரிப்புத் தொழில்கள் நமது நாட்டில் பெரும் பாலும் பழைய முறையிலேயே நடைபெறுகின்றன். அதில் பணியாற்றும் பாட்டாளிகள் மிகவும் கடுமையான உழைப்பாளிகளாக இருக்கிறார்கள்.

இரண்டாவதாக, மரத்தைக் கொண்டு நடைபெறும் தொழி லைத் தச்சு வேலை எனக் கூறுகிறோம். தச்சு வேலை மூலம் தான் விவசாயம் நெசவுத் தொழில் மீன் பிடித்தல் முதலிய அனைத்திற்கும் அவசியமான கருவிகள் செய்யப் படுகின்றன. தச்சு வேலையும் கொல்லு வேலையும் சேர்ந்து தான் உற்பத்தியின் வள்ர்ச்சிக்கான உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சிக்கான அடிப்படைத் தொழில்களாக வளர்ந்துள்ளன.

ஏர், கலப்பை, வண்டிகள், இதர விவசாயக் கருவிகள், தறிகள் மற்றும் இதர கைத்தறித் தொழிலுக்கு வேண்டிய கருவிகள், கட்டுமரம், ஒட்ம், தோன்னி. படகு, கப்பல் முதலிய மீன் பிடிப்பதற்கான சாதனங்கள் வீடுகள் கட்டு வதற்கான நிலை கதவு, சாளரம், J.y முதலிய சாமான்கள், வீட்டிற்கு வேண்டிய கட்டில், பலகை, நாற் காலி மேஜை முதலிய பல சாமான்கள் செய்வது தச்சு வேலை மூலமாகத்தான். இன்றைய நவீனத் தொழில் களிலும் தச்சுவேலைகளுக்கு முக்கிய இடம் இருக்கிறது.

நமது நாட்டில் உள்ள தச்சு வேலைத் தொழிலாளர்களில்

பெரும் பகுதி இப்போதும் கிராமப்புறங்களில் தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். இப்போது முதலாளித்துவ வளர்ச்சியையொட்டி சில மாற்றங்கள் எற்பட்டு வரு

கின்றன. இருப்பினும் இந்தத் தொழிலில் உள்ள பாட்டாள். களின் பிரச்சனை மிகவும் முக்கியமானதாகும்.

மூன்றாவதாக, இரும்பு வேலை, இரும்பு சம்பந்தமான வேலை கொல்லு வேலை என்று அழைக்கப்படுகிறது. கொல்லு வேலை தச்சு வேலையுடன் இணைந்ததாக இருக்கிறது. இரும்பைக் காய்ச்சி உருக்கி எடுப்பது, அதைப் பாளங்களாக்கி பதப்படுத்துவது, உருக்கு ஆக்குவது, அந்த இரும்பு உருக்கிலிருந்து விவசாயம், நெசவு, மீன் பிடித்தல், மரம்.அறுத்தல், தச்சு வேலைமுதலிய தொழில்களுக்கு ஆதாரமான உற்பத்திக் கருவிகள் செய்வது கொல்லு வேலையின் பணிகளாகும். மண்வெட்டி கோடரி, உளி, சுத்தியல், சம்மட்டி முதல் பல முக்கியமான நுட்பமான கருவிகள் வரை செய்வதற்கு கொல்லுவேலை மிகவும் அவசியமான தொழிலாகும்.

எந்திர வளர்ச்சியை ஒட்டிக் கொல்லு வேலையில் மாற்றங் கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இருப்பினும் த்ச்சு வேலையுடன் சேர்ந்த கொல்லு வேலையும் கிராமப்புற த்