பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 123

ரீ தி பி ல் தி சட்ட .ே வ ண்டு ம். அமைப்புகள் மூலம் அவர்களுடைய கோரிக்கைகளைத் தொகுத்து அவர்களு டைய உரிமைகளை உயர்த்தப் பாடுபட வேண்டும்.

4 ஐந்தொழில் தொழிலாளர்கள்:

கல், மரம், இரும்பு, பித்தளை,-வெண்கலம், தங்கம் ஆகியவைகளை ஆதாரமாக் கொண்டு, கைவினைத் தொழில்களில் ஈடுபட்டுள்ள கிராமப்புற மக்கள்,

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், நாகரிக வளர்ச்சிக் கும் ஆதாரமான கிராமப்புறப்பாட்டாளிகளாவர். இந்த ஐவகைத் தொழில்களும் இதர தொழில்களுக்கும் விவசாயத்திற்கும், உற்பத்திக்கருவிகளை உருவாக்கு

வதற்கு ஆதாரமாகும்,

முதலாவதாக கல், நமது நாட்டின்-குறிப்பாகத் தென் மாநிலங்களில் உள்ள மிகப் பெரிய சிறந்த செல்வமாகும். முதலில் கருங்கல் தொன்மையானதாகும். கருங்கல் மிகச் சிறந்த கட்டிடப் பொருள்களில் ஒன்றாகும். நமது நாட்டில் கட்டப் பட்டுள்ள பெரிய பெரிய கோவில்கள், கோட்டை கள், குளங்கள் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வரலாற்றுச் சின்னங்களாக விளங்குகின்றன.

கல்லை சதுரித்தும் கொத்தியும், மெருகிட்டும் கட்டிடங் களுக்கு, சுவர்களுக்கு, துாண்களுக்கு, தளத்திற்குப் பயன் படுத்துகிறோம். பொடிக்கற்களும் கட்டிட வேலைகளுக்குப் பயன்படுகின்றன. கல்லை மெருகிட்டு அழகிய முறையில் கட்டிடங்களுக்குப் பயன் படுத்துகிறார்கள். கற்களின் சரளை, சாலைகள், இருப்புப்பாதைகள் போடு வதற்கு மிகவும் பயன் உள்ளதாகும்.கல் உடைக்கும் வேலை யில் பல ஆயிரம் பாட்டாளிகள் பணியாற்றுகிறார்கள்.

கற்களிலிருந்து உயர்தரமான சிற்பங்கள், சிலைகள், உருவாக்கப்படுகின்றள. இந்த சிற்பங்கள், சிலைகள் மிகவும் விலை மிக்கவை. சிறந்த கலைச் சிறப்பும் நாகரிகச் சிறப்பும் மிக்கவை அதில் நமது நாடு புகழ் பெற்றது. நமது நாட்டு சிற்பிகளைப் பாதுகாப்பதும் அவர்களுடைய தொழிலுக்கும் வாழ்க்கைக்கும் முழு உதவி செய்ய வேண்டியதும்அரசாங்கத் தின் பொறுப்பாகும்; சமுதாயத்தின் கடமையாகும்.

இப்போதெல்லாம், நமது நாட்டின் காடு முரடான கற்கள் எல்லாம் ஜப்பான் முதலிய வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி யாகின்றன. அங்கு இந்தக் கரடு முரடான கற்கள், பாளங் 4 Tதி அறுக்கப்பட்டு, பாலிஷ் செய்யப்பட்டு, நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன. கருங்கல்லை மூலப்பொருளாகக் கொண்ட இந்தத் தொழில்களை நமது நாட்டில் பெருக்கி, அந்த லாபத்தை நமது நாடு அடைய முடியும்.