பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் 0 1 1

கால்லையில் பொருள்கள் எல்லாம் இடை தடுமாறும் நீரால்

செல் உறு கதியில் செல்லும்

வினை எனச் சென்றது அன்றே

என்றும் கம்பன் நமது ஆற்றுவளத்தைப் பாடுவதைக் , u .

குறிஞ்சி என்றால் மலையும் மலையைச் சார்ந்த இடங் களும், முல்லை என்றால் காடுகளும் காடுகளைச் சார்ந்த இடங்களும், மருதம் என்றால் நதி ஓடும் சமவெளிகளைச் சார்ந்த நிலங்களும் என்றும் நெய்தல் என்றால் கடலும் கடலைச் சார்ந்த இடங்களும் என்று தமிழ் இலக்கியங் கள் நமது மண்ணின் பண்பு கூறுகின்றன.

மலை, காடு, நதி, கடல் நமது வளங்கள். இந்த வளங் கள் நமது மண்ணைப் பொன்னாக்கி வருகின்றன.

நமது மலைகள், காடுகள், ஆறுகள், கடல் வளம் ஆகியவை களை ஆதாரமாகக்கொண்டு தமது நாட்டின் கால் நடை வளர்த்த லும் விவசாயமும் வளர்ச்சி பெற்றிருக்கின்றன.

குடகு மலையிலிருந்து குமரிமுனை மலை வரையிலும் உள்ள மலைத் தொடர்கள் நமது தமிழகத்தின் மேற்கெல்லை யின் அரண்களாக அமைந்துள்ளன. இவைகளிலிருந்து வரும் காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வைகை பொருனை ந;

கள் பெரியவை. இவை தவிர வேறு பல சிறிய ஆறுகளும் துணை ஆறுகளும் நமது சிறிய பல் மலைப்பகுதிகளிலிருந் தும் தோன்றி நமக்கு வளமும் வனப்பும் ஊட்டி வருகின்றன. ஏலகிரி, ஏற்காடு, கொல்லி மலை, சிறு மலை முதலிய_நமது சிறந்த சிறிய மலைகளும், காடுகளும், அடங்கிய பகுதிகளா கும். இவைகளிலிருந்து வரும் சிற்றாறுகளும் நமக்கு வற்றாத வளத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

இந்திய நாட்டின் வளம் உலகப் பிரசித் தி பெற்றது. இதனைக் கேள்விப்பட்டு எத்தனையோ படையெடுப்பு களும், குடியேற்றங்களும் இங்கு நடந்துள்ளன என்பதை வரலாற்றின் மூலம் அறிகிறோம்.

புல்வெளிகளையும் மேய்ச்சல் தரைகளையும், காடுகளையும் ப்யன்படுத்தி கால் நடைச் செல்வங்கள் இங்கு வளர்ந்திருக் கின்றன. மாடுகள் ஆடுகள் எருமைகள் பன்றிகள் முதலியன பெரும் பண்ணைகளாகவும் குடும்பப் பராமரிப்பாகவும் வளர்க்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கிராமக் குடும்பதி திலும் ஆடு, மாடு, கோழி, பன்றிகள் வைத்திருப்பதுஅவற்றைப் பராமரிப்பது நமது கிராமப் பொருளாதாரதி தின், சுயதேவைப் பொருளாதாரத்தின் ஒரு பகுதியாகவே வளர்ச்சி யடைந்து வந்திருக்கிறது. =