பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் 0 147

3. சிறு விவசாயிகள்:

இவர்களுக்கு சொந்தமாகக் கொஞ்சம் நிலம் இருக்கும். ஏர் மாடுகளும் இருக்கலாம். இந்த விவசாயிகள் சொந்தமாக நிலத்தில் தங்கள் குடும்பத்தோடு உழைக்கிறார்கள்.ஆயினும் தங்கள் சொந்த நிலத்திலிருந்து கிடைக்கும் வருவாய் மட்டும் இவர்களுடைய குடும்பத்திற்குப் போதாது. தங்கள் சொந்த நிலத்தில் வேலை செய்தது டோக மீதி நேரங்களில் கூலி வேலைக்கும் செல்கிறார்கள்.

இவர்கள் கூலி வேலைக்குச்செல்லும் போது இதர விவாசயத் தொழிலாளர்களின் நலன்களுடன் இணைந்துசெல்கிறார்கள். தங்கள் சொந்த நிலத்தில் வேலை செய்யும் போது, நீர்ப் பாசனம், மின்கட்டணம், கடன், ரசாயன உரம் பூச்சிமருந்து, பொறுக்கு விதை,விளை பொருளுக்கு நியாய விலை முதலிய பிரச்சனைகள் காரணமாக நிலவுடமையாளர்கள் நலன் களையும் கொண்டிருக்கிறார்கள்.

தங்களுடைய சொந்த நிலத்தில் தாங்கள் வேலை செய்வது மட்டு மின்றி மற்ற விவசாயத் தொழிலாளர்களையும் வேலைக்கு அமர்த்தி அவர்களுடைய உழைப்பைச் சுரண்டவும் செய்கிறார்கள். இவர்களுக்குச் சொந்தமாக நிலம் இருப்ப தால் சொத்துடைமை உணர்வு நிலையும் இவர்களுக்கு இருக்கிறது. தங்களுடைய சொந்த நிலவுடமையை விரிவு படுத்திக் கொள்ளவும் தங்கள் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளவும் விரும்புபவர்களாக இருக்கிறார்கள். ஆனால் முதலாளித்துவ மார்க்கட் சுரண்டல் காரணமாகவும் முதலாளித்துவ பொது நெருக்கடியின் காரணமாகவும் அவர் களுடைய வாழ்க்கை நிலை முன்னேறுவதற்கு முடியாமல் இருக்கிறது. அரசாங்க நிர்வாகத்தின் மூலமும் இவர்கள் மிகவும்.புறக்கணிக்கப்படும்பகுதியினராகவே இருக்கிறார்கள்.

அரசாங்க அறிவிப்புகள், பிரகடனங்கள்மூலம் சிறுவிவ சாயிகள்பற்றி அடிக்கடிபேசப்பட்டாலும், பசுமைப் புரட் சியின் அனுகூலங்களை இந்தப்பிரிவு விவசாயிகள் மிகவும் குறைவாகவே பெறமுடிகிறது. உதாரணமாக கூட்டுறவு நாணயசங்கங்கள் கிராமப்புறங்களில் பெரும்பாலும் சற்று வசதிக்காரர்கள் அல்லது அரசியல் ஆதிக்கக்காரர்கள் பிடிப்பிலேயே இருக்கிறது. அதனால் கூட்டுறவு கடன் வசதிகள் சிறுவிவசாயிகளுக்கு சிறிதளவே கிடைக்கிறது.

உாம், பூச்சிமருந்து, விதைபோன்றவைகள் வாங்குவதில் சிறிய அளவிலேயே இவர்கள் வாங்க வேண்டியதிருப்பதால் விலையில் சற்று கூடுதலாகவே கொடுக்கவேண்டியதாகிறது. இவர்களுடைய விளைபொருள்களை விற்கும்போது வில்லறையாக விற்பதால் அவர்களுக்குச் சற்று குறைவான விலையே கிடைக்கிறது. அதனால் முதலாளித்துவ மார்க்கட் காண்டல் அமைப்பின் பளு சற்று அதிகமாகவே சிறு