பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 5 O கிராமப்பு றப் பாட்டாளிகளை நோக்கி = +

இவர்களுக்கு தாங்கள் சாகுபடி செய்யக் கூடிய நிலத்திற்கு உத்தரவாதமும் பாதுகாப்பும், நியாயமான வாரமும் கிடைக்க வேண்டியது. அவர்களுடைய முக்கியமான வர்க்க நலனாக இருக்கிறது, இவர்களுக்கு சாகுபடியாளராக செயல் படும் போது நிலவுடமையாளர்களின் குண இயல்பும், கூலி வேலை செய்யும்போது விவசாயத் தொழிலாளிவர்க்கத்தின் குண இயல்பும் ஏற்படுகிறது.

இந்த ஏழை விவசாயிகள் சாகுபடியாளர்களாக செயல் படும் போது இவர்களுக்கு சாகுபடிக்கு நிலம் கொடுக்கும் நிலவுடமையாளர்களால் நிலப்பிரபுத்துவ உறவு முறையில் சுரண்டப்படுகிறார்கள். இந்த சாகுபடியாளர்களின் நலன் களைப் பாதுகாக்கும் முறையில் சாகுபடியாளர் பாதுகாப்புச் சட்டமும் நிய rய வாரச் சட்டமும்கொண்டு வரப்பட்டிருக் கின்றன.

நிலப்பிரபுக்களின் நிலவெளியேற்றக் கொடுமைகளையும் வாரம் குத்தகைக் கொடுமைகளை எதிர்த்தும் நடந்துள்ள மிகப் பெரிய விவசாயப் போராட்டங்கள் காரணமாகத் தான் இந்த இரண்டு சட்டங்களும் வந்தன. இருப்பினும் இந்த இரண்டு சட்டங்களும் சாகுபடியாளர்களுக்கு சில பாதுகாப்பு உரிமைகளைக் கொடுத்துள்ளது. ஆயினும் இந்த சட்டங்கள் சரியாக அமுல் நடத்தப்படவில்லை. சாகுபடி யாளர் பதிவு நிலவுடமையாளர்களுக்கு சாதகமாகவே செய்யப்படுகிறது. அதனால் அவர்களுடைய இதர விவசாயத் தொழில் பற்றிய பிரச்சனைகள் தீரவில்லை.

நிலம், நீர்ப்பாசனம், உரம், பயிர்ப்பாதுகாப்பு, கூலி, விளை பொருளுக்குக் கட்டுபடியாகும் விலை முதலிய பிரச்சனைகள் இதர விவசாயிகளுக்கு இருப்பதைப் போவே இவர்களுக்கும் இருக்கின்றன. இதில் முதலாளித்துவ அமைப்பு முறைக்கும் இவர்களுக்கும் தான் நேரடி முரண்பாடும் மோதலும் ஏற் பட்டிருக்கிறது. இவர்களுடைய, விவசாயத்திற்கு வேண்டிய இடுபொருள்களின் விலையும் கடனுக்குரிய வட்டியும்விளை பொருள்களுக்கு கட்டுபடியாகும் விலையும் முதலாளித்துவப் பொருளாதாரத்துடன் தொடர்பு கொண்டவை. இதில்

இந்தப் பிரிவுத் தொழிலாளர்கள் கடுமையாக சுரண்டப் படுவது முதலாளித்துவத்தின் மூலமாகும்.

இதனால் இவர்களுடைய வர்க்க நலன் முதலாளித்துவ ஒழிப் பிலே தான் அடங்கியிருக்கிறது. குறிப்பாக நீர்ப்பாசனவிச்தி, நியாய விலையில் இடுபொருள், குறைந்த வட்டியில் சுல்ப மா ன கடன் வசதி, விளை பொருளுக்குக் கட்டுபடியாகும் விலை ஆகியவற்றில் அடங்கியிருக்கிறது. இவை முத்லாள்த் துவ வர்க்க நலனுக்கு எதிரானது.