பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H

5 4 # )சீனிவாசன் C

அழுத்தம் மேலும் அதிகமாகிறது. இந்த அழுத்தம் குறைக்கப் பட வேண்டியது அவசியம்ாகும். அதற்கு தொழில் வளர்ச்சி பெருக வேண்டும். புதிய வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வேண்டும்.

விவசாயத் தொழில் இன்னும் அதிக அளவில் இயற்கைப்

பருவநிலையைச் சார்ந்திருக்கிறது. வறட்சி, வெள்ளங் களால் விவசாயத்தொழில் பாதிக்கப்படும்போது மிகவும் கடுமையாக பாதிக்கப்படுபவர் விவசாயத் தொழி

லாளர்கள்தான். விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை பாதிப்பு ஏற்படுகிறது.

விவசாயத்தொழிலாளர்களின் வர்க்க நலன்களில், வேலை உத்தரவாதம், ஊதிய நிர்ணயம், குடியிருப்பு முதலிய வைகள் அடங்கியுள்ளன.

விவசாயத் தொழிலாளர்களுடைய உழைப்புச் சக்தி நில வுடமையாளர்களால் சுரண்டப்படுகிறது.

அதனால் விவசாயத் தொழிலாளர்களுக்கும் நிலவுடமை யாளர்களுக்கும் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. இருப் பினும் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளில் உள்ள முரண் பாடுகளில் விவசாயத்தொழிலாளர்களுக்கும் முதலாளித்துவ மார்க்கட் முறைச்சுரண்டலுக்கும் இடையிலுள்ள முரண் பாடுதான் கடுமையான முரண்பாடாக, உடனடியாகத் ர்ேவுகாண வேண்டிய முரண்பாடாக உள்ளது. இந்த விவசாயத்தொழிலாளர்களில் சுமார் 70 சதவீதம் தாழ்த்தப் பட்டமக்கள். இவர்கள் பொருளாதாரச் சுரண்டலுக்கு மட்டுமில்லாமல் சமுதாயஇழிவுகளுக்கும் உட்படுத்தப்படு கிறார்கள்.

2 ஏழை விவசாயிகள் :

சொந்தநிலம் இல்லாமல் வாரம்-குத்தகைக்கு சாகுபடி செய்யும் விவசாயிகளைப் பொதுவாக ஏழை விவசாயிகள் என்று குறிப்பிடலாம். இவர்களுக்கு ச்ொந்தமாக ஏர் மாடுகள் இருக்கும். வாரத்திற்கோ, பங்கிற்கோ குத்த கைக்கோ. நிலம்:எடுத்து அதில் சாகுபடி செய்பவர்களை தனிப்பிரிவாக எடுத்துக் கொள்ளலாம். இவர்கள் தாங்கள் சாகுபடி செய்யும் நிலத்தில் வேலை செய்வது போக மீதியுள்ள நேரத்தில் கூலி வேலைக்கும் போகி றார்கள். அதேசமயத்தில் தாங்கள் சாகுபடிசெய்யும் நிலத் தில் விதைப்பு, களையெடுப்பு, அறுவடை முதலிய காலங் களில் வேறு தொழிலாளர்களையும் வேலைக்கு அமர்த்தி, அவர்களுடைய உழைப்புச் சக்தியையும் பயன்படுத்திக் கொள் கிறார்கள்.