பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் 0 13

மன்னர்களும் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் வெட்டு வதில் அதிக கவனம் செலுத்தியுள்ளனர். சோழ மன்னர்களும் கால்வாய்கள் கண்மாய்கள் வெட்டுவதில்

அதிக கவனம் செலுத்தியுள்ளனர்.

அடுத்த நாட்டு மண்ணின் மீது படையெடுத்து, தன் படை பலத்தின்மூலம் அந்த பண்னைக் கைப்பற்றித் தங்கள்ஆட்சி எல்லையை விரிவு படுத்திக் கொள்வதில் தங்கள் பேரும் புகழும் பரவும் என்று சிறுநில மன்னர்களும் குறு நில ம்ன்னர்களும் கருதிய காலம் இருந்தது. ஒவ்வொரு சிறு நில மன்னனும் தான் பெரு நில மன்னனாக ஆவதற்கு ஆசைப் பட்டுத் தனது படை பலத்தைப் பெருக்கினான். அவ்வாறு தமிழ் மன்னர்கள் தங்கள் படைபலத்தையும் போர்க்கருவி களையும் பெருக்கி, அடுத்த நாடுகளின் மீது படையெடுத்துப் போர் நடத்திய காட்சிகளை வீரமென சித்திரிக்கிறது, சிறந்த தமிழ் இலக்கியமான புறநானுாறு.

உதாரணமாக ஒரு காட்சி. ஒரு புகழ் மிக்க, வீரம் நிறைந்த மன்னன், அடுத்த நாட்டின் மீது படையெடுக்கிறான். அந்த மன்னன் படை பலம் மிக்கவன். அவனுடைய படைகள் எதிரி நாட்டிற்குள் புகுந்து ஏராளமான நாசங்களை விளை விக்கின்றன. அவனுடைய யானைப் படைகள் எதிரி நாட்டு வயல் வெளிகளில் மிதித்துப் பயிரை அழித்து அவற்றைச் சேறாக்குகின்றன. மாலைக் கதிரவனின் ஒளிவீசி, அந்தச் சேறு செக்கச் செவேலென்று ரத்தம் சிந்திக்கிடக்கும் போர்க்களக்காட்சி போல் தென்படுகிறது. அது அந்த மன்னனின் வீரத்தை எடுத்துக் காட்டுவதைப் போல் இருக் கிறது என்று. ஒரு புலவன் சிறப்பித்துப் பாடுகிறான். இந்தக் காட்சியில் வீரத்தின் பின்னே அழிவும் நாசமும் ரத்தச் சேறும் மண்டிக்கிடக்கின்றன.

அதே புறநானுாற்றுக் காவியத்தில் மற்றொரு புலவன்,

‘’ மன்னா, அடுத்த நாட்டு மண்ணின் மீது ட ட யெடுத்து அதை அபகரிப்பதில் உனக்குப் பேரும் புகழும் ல்லை மக்களை வாழ்விக்க உணவு வேண்டும். ‘உண்டி

காடுத்தோர் உயிர்கொடுத்தோர். உண்டி பெருக்க நீர் நிலைகள் வேண்டும். அந்த நீர் நிலைகளை உண்டாக்குவாயாக, அது தான் உனக்குப் பேரும் புகழும் கொடுக்கும்’ என்று போர்புரியத் துடித்த மன்னனைப் பார்த்து இடித்துக் கூறுகிறான்.

‘?!!!?” சிரிய மனிதாபிமானம் நிறைந்த சமுதாய இகன்ை தமிழகத்திலும் இந்திய நாட்டின் இதர பகுதி களிலும் வளர்ந்துதான் எண்ணற்ற நீர் நிலைகள், பாசன முறைகள் நமது நாட்டில் உண்டாக்கப்பட்டுள்னன. தமிழ சுற்றில் மட்டும் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட நீர்ப் பாசன et நிலைகள் நிலை பெற்றிருக்கின்றன.