பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

புதிய வெடிப்புகளும் போராட்டங்களும்

1945 -50ம் ஆண்டுகளில் இந்திய விவசாயிகளின் போராட் டம் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகவும், இந்திய நிலப் பிரபுக்களுக்கு எதிராகவும், ஜமீன்தாரி முறைக்கும் சுதேசி மன்னராட்சி முறைக்கும் எதிராகவும், ல்ேவாதேவிக் கொடு மைக் கெதிராகவும் மிகவும் கடுமையாக எழுந்தது. தஞ்சை யில் பண்ணை அடிமை முறைக்கு எதிரான ப்ோராட்டம் முதல் தெலுங்கானா விவசாயிகளின் ஆயுதம் தாங்கிய போராட்டம் வரை எழுச்சி மிக்க போராட்டங்கள் நடந் தன. தமிழ் நாட்டில் தஞ்சை இராமநாதபுரம், தென்ஆற் காடு, சேலம், நெல்லை போ ன்ற பகுதிகளிலும் கேரளா, ஆந்திரா, வங்காளம், பீகார், மகாராஷ்டிரா, உத்தரப்பிர தேசம், பஞ்சாப், காஷ்மீர், மாநிலங்களிலும் எழுச்சிமிக்க விவசாயிகள் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்தப் போராட்டங்களின் பலனாக பலமாற்றங்களும் ஏற் பட்டன. நாடுக தந்திரம் அடைந்தது. சுதேசி மன்னர் ஆட்சி முறை ஒழிக்கப்பட்டது. ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது. பல மாநிலங்களிலும் பல்வேறு நிலச்சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

நாட்டின் அடிப்படை அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது. நாடு குடியரசு என பிரகடனம் செய்யப்பட்டது.

வயது வந்தோர் அனைவருக்கும் ஒட்டுரிமை வந்தது. வயது வந்த கிராமப்புற மக்கள் அனைவருக்கும் இந்திய வரலாற் றில் முதல் தடவையாக ஒட்டுரிமை கிடைத்தது. தாழ்த்தப் புட்டு, பிற்படுத்தப்பட்டு, ஒதுக்கப்பட்டிருந்த விவசாயத் தொழிலாளர்களுக்கெல்லாம் கிராமப்புற ஏழைகளுக்கெல் லாம் ஒட்டுரிமை கிடைத்தது. மேல் தட்டு வேட்பாளர்கள் எல்லாம் அவர்களிடம் போய் கையெடுத்துக் கும்பிட்டு ஒட் டுக்கேட்கும் காலமாக மாறியது.