பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O. 169

இருந்த எம்.ஜி.ராமச்சந்திரனைப் போன்றவர்கள் விவசாயி கள் போராட்டத்திற்கும் விவசாயிகளின் பிரச்னைகளுக்கும் எதிரான நிலைதான் எடுத்தார்கள் என்பது, பின்னர் ஏற் பட்ட அரசியல் நிகழ்ச்சிகளில் மறைந்துவிட்டது. மக்களின் கவனமும் உண்ர்வுநிலையும் அந்த நேரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் மீதே அதிகமாக இருந்தது.

புதிய ஆட்சியின் அணுகு முறை

1977-ஆம்ஆண்டில்மத்தியிலும் மாநிலத்திலும்புதிய ஆட்சி கள் ஏற்பட்ட போதிலும் விவசாயிகளின் பிரச்னைகள் தொடர்ந்தன. விவசாயிகளின் பிரச்னைகளைப் பற்றி பரி சீலனை செய்வதற்கு என மாநில அளவில் உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டது.

பொதுவாக நாட்டில் தொழிலாளர், விவசாயிகள் பிரச்னை கள் எழும்போதும் இதே போல வேறு எந்த வகை அரசியல் பொருளாதார, சமூகப் பிரச்னைகள் பற்றி விவகாரங்கள் ஏற்படும் போதெல்லாம் விசாரனைக் கமிட்டிகள், கமிஷன்கள், குழுக்கள் போடுவதும், நீடித்த விசாரணைகள் நடத்துவதும், அறிக்கைகள் சமர்ப்பிப்பதும், சில சீர்திருத்தங்கள் , நிவாரணங்கள் அறிவிப்பதும், அரசாங்க நிர்வாக முறையின் பகுதியாகும்.

அதே சமயம், இத்தகைய அரசாங்கக் குழுக்களின் அதிகாரங்கள், அதிகார எல்லைகள் குறைவானது தான் என்றாலும் அவைகள் மூலம் சில உடனடி நிவாரணங்கள் ைெடக்கச் செய்வதற்கு அத்தகைய குழுக்களைப் பயன் படுத்திக் கொள்வதும் அத்தகைய குழுக்களால் பலன் இருக்காது என்று கருதும் போது அவைகளிலிருந்து விலகிக் கொள்வதும் புரட்சிகரப் பாட்டாளிவர்க்க இயக்கத்தின் கடமையாக இருந்து வருகிறது.

மாநில அரசு அமைத்த உயர் மட் டக் குழுவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுள்ள தமிழ் நாடு விவசாயிகள்

சங்கமும், விவசாயத் தொழிலாளர் சங்கமும் அங்கம் வகித்து சிறந்த பல ஆலோசனைகளை எடுத்துக் கூறியது. அந்த உயர் மட்டக் குழுவும் பல ஆலோசனைகளை

அரசுக்கு வழங்கியது. இந்தக் குழுவின் முடிவுகள் பரிந்துரை கள் தான் . எனவே அவைகளை செயல்படுத்துவது அரசிற்குக் கட்டாயமில்லை.

அந் கமுறையில் அரசு சீர்திருத்த நடவடிக்கைகளின் பெயரில் இரண்டொரு நடவடிக்கைகளை எடுத்தது.

மின் கட்டணப் பாக்கிகளை ரத்து செய்யும்படி விவசாயி கள் கேட்ட கோரிக்கையை அரசு ஏற்கவில்லை. பாக்கி