பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 171

அணுகும் முறைகளை அதி முக அரசு கையாண்டிருக்கிறது. அதன் காரணமாக விவசாயிகள் இயக்கம் தாற்காலிக மாக சற்று அமைதிபட்டிருக்கிறது. ஆனால் இந்த அமைதி நீடிக்கும் என்று கூற முடியாது. .

அதிமுக அரசின் கொள்கை விவசாயிகள் சம்பந்தமாக மட்டுமல்லாமல், தொழிலாளர்கள், நெசவாளர்கள் , ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் முதலிய மக்கள் பகுதி களின் பால் உள்ள அணுகும் முறையும் இதே போல் தான் இருந்துள்ளது .

முதலாளித்துவ வர்க்க அரசுகளிள் சூழ்ச்சிகளையும் வஞ்சக முறைகளையும் புரிந்து கொண்டு ஒன்றுபட்ட அமைப்பு களையும் இயக்கங்களையும் உருவாக்குவதற்கான வகை யில் விவசாயிகளின் உணர்வு நிலையை உயர்த்தவேண்டும்.

அரசின் சூழ்ச்சிகளை விவசாயிகள் மறந்து விடவில்லை. அவர்களுக்கு வாய்ப்பு வரும்போது அவர்களுடைய சொந்து வழியில்செயல்பட்டு, தங்கள் உணர்வுகளை வெளிப் படுத்தியுள்ளார்கள்.

1980-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத்தேர் தலில், அதிமுக கட்சியை தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தோற்கடித் தார்கள். விவசாயிகளின் அதிருப்தி யே அதிமுகவின் தோல் விக்குக் காரணமாக இருந்தது.

1980-ல் மத்தியில் ஆட்சிக்குவந்த இ. காங்கிரஸ் ஆட்சி தனது யதேச்சாதிகார முறையில் தனது சொந்த அரசியல் லாபம் கருதி அரசியல் சந்தர்ப்பவாத முறைகளில் அதிமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்தது. அது அதிமுக மீது அடித்தட்டு மக்களுக்கு சற்று அனுதாபத்தை உண்டாக்கியது.

அத்துடன், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் வலியுறுத்தலுக் குட் பட்டு, அதிமுக கட்சித்தலைமை விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற - குறிப்பாக ரிசர்வ் வங்கி மறுத்தாலும் மாநில அரசின் சொந்த நிதியிலிருந்து ஈடு கட்டி விவசாயிகளின் எல்லாக் கடன்களையும் ரத்து செய்வதாக வாக்குறுதி கொடுத்து விவசாயிகளின் தலைவர் களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றது.

வெற்றி பெற்ற பின்னர் விவசாயிகளுக்குக் கொடுத்த வாக் குறுதிகளைக் காற்றில் விட்டுவிட்டது. அதேசமயத்தில் விவ சாயிகளின் இயக்கத்தைப் பலவீனப் படுத்துவதற்கும் தொடர்ச்சியான வஞ்சகச் சூழ்ச்சிகளைச் செய்தது. விவ சாயிகள் இயக்கத்திலும் அமைப்புப்பணிகளிலும் சோர்வை உண்டாக்கும் முயற்சிகளையும் அது தொடர்ச்சியாக முயற் சிகளைச் செய்து கொண்டு வந்தது.