பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் () I 7

கிராமப்புறத் தொழிலாளர்கள்:

கிராமப்புறப் பாட்டாளிகளில் பெரும்பாலோர் விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் அத்துடன் இதர கிராமப்புறத் தொழில்களிலும் பழைய தொழில்களிலும் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கான கடின உழைப்பாளர் களும் ருக்கிறார்கள். கைத்தறி நெசவுத் தொழில், பனை தென்னை மரம் ஏறுதல், மீன் பிடித்தல், தோல் பதனிடுதல், கயிறு பாய் பின்னுதல், கொல்லு தச்சு முதலிய ஐந்தொ ல்கள், கட்டிடத் தொழில் ஆடு மாடு மேய்த்தல் முதலிய பல வேறு பழங்காலத் தொழில் களில் பணியாற்றும் பாட்டாளிகளும் ஏராளமாக இருக் கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கை நிலைமைகளும் வர வர மேலும் மோசமடைந்து கொண்டு வருகிறது.

இந்தத் துறையில் உள்ள பாட்டாளிகளுக்கும் தொழில் ப்ாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு மாற்றுத் தொழில்கள் முதலியன பற்றிச் சிந்திப்பதும் அவர்களின் உணர்வு நிலையை உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற் கொள்ளுவதும் மிகவும் அவசியமாகும்.

மத்திய கால மன்னராட்சி முறையின் கொடுங் கோன்மை

மத்திய காலத்தில் இந்திய நாட்டின் இயற்கை வளமும், இந்திய மக்களின் இடையறாத முயற்சியும் கடும் உழைப்பும் நமது நாட்டின் விவசாயத் துறையின் முன்னேற்றத்திற்கும் கிராம்த் தொழில் முன்னேற்றத்திற் கும் பெரிதும் காரணமாக இருந்திருக்கின்றன.

இருப்பினும், இந்திய நாட்டின் மன்னராட்சி முறையும்,

சமுதாய அமைப்பு முறையும், அதன் வளர்ச்சியில் முன்னேற்றத்தில், பெரும் தாக்கங்களை உண்டாக்கி யிருக்கின்றன. அதன் காரணமாக நீண்ட தேக்கமும் இந்திய சமுதாயத்தில் ஏற்பட்டிருந்தது என்பதையும்

நமது நீண்ட வரலாற்றில் காண்கிறோம்.

ந்தியாவின் வளத்தைக் கேள்வியுற்று வெளியிலிருந்து கழ்த்திய பல படையெடுப்புகளும், இந்திய நாட்டிற் ள்ளேயே இருந்த மன்னர்களுக்குள் நடைபெற்ற பார்களும், இயற்கைச் செல்வங்களையும், இந்திய மக்கள் உண்டாக்கிய செல்வங்களையும் அழித்திருக்கின்றன.