பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி

நமது நாட்டு விவசாயத் தொழிலாளர்கள் கிராமப்புறங் களின் அடிப்படை வர்க்கமாகும்.அவர்களுக்குப் போதுமான வேலை, ஊதியம், வீட்டு மனை வசதிகள் சமூகப்பாது காப்பு கல்வி, கலாச்சார வசதிகள் இல்லாமல் இருக்கிறார் கள் . சில இடங்களில் விவசாயத் தொழிலாளர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட மக்களாக, பிற்படுத்தப் பட்ட மக்களாக இருக்கிறார்கள். அவர்கள் சமூகரீதியில் இன்னும் பின் தங்கியிருக்கிறார்கள். இன்னும் சில இடங் களில் சமூக. வேறுபாடுகள், பாகுபாடுகள் கொடுமைகள் நீடிக்கின்றன. இந்த சமூகக் கொடுமைகளை பாகுபாடு „EF Gio GrT வேறுபாடுகளை எதிர்த்து நாம் உறுதியாகப் போராட வேண்டியது அவசியம்.

1. வேலை

விவசாயத்_தொழிலாளர்களுக்கு, நமது நாட்டின் பெரும் பாலான இடங்களில் போதுமான வேலை இல்லை. நமது நாட்டு விவசாயத் தொழிலும் போதுமான வேலை கொடுக்கும் நிலையில் இல்லை. உத்திரவாதமான நீர்ப் பாசனமும், இரு சாகுபடியும் தொடர்ந்து நடை பெறு sm i) விவசாயத் தொழிலாளர்களுக்கு ஒரளவுக்கு வேலை கிடைக்கும். அந்த நில்லயை எட்டுவதற்கு ந்ா. வெகு தூரம்_செல்ல வேவண்டியதிருக்கிறது. இருப்பினும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஏழை, ம்ற்றும் சிறு விவசாயிகளுக்கும் போதுமான வேலை கிடைக்க துன்ை தொழில்களை அபிவிருத்தி செய்ய வேண்டும். நமது நிலத் திற்கு நீர்ப்பாசன வசதி கிடைப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும்.

நதி நீர் இணைப்பு, கண்மாய்கால்வாய் பராமரிப்பு ஆகிய வேலைகள் நடை பெறுமானால் விவசாயத் தொழிலாளர் களுக்கான வேலை வாய்ப்பை அதிகரிக்கலாம். அதற் தான ஸ்தல கோரிக்கைகளைப் பற்றியும் முடிவு செய்ய வேண்டும்.

2. கூலி

விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச கூலிக்கு உத்தரவாதம் செய்ய வேண்டும். அத்துடன் விவசாயத் தொழிலாளர்களுக்கும் ஏழை மற்றும் சிறிய விவசாயி களுக்கும் கிராமப்புற உதிரிப் பாட்டாளிகளுக்கும் அத்தியா வசியப் பண்டங்கள் மலிவான விலையில் பொது விநியோகத்தின் மூலம் கிடைப்பதற்கு உத்திரவாதம் செய்ய வேண்டும்.

3. வீட்டுமனை D I / நாட்டு_விவசாயத் தொழிலாளர்களின் மிக முக்கிய