பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி

ஜமீன் தாரி முறை ஒழிக்கப்பட்டு, படிப்புடியாக மொழி விழி மாநிலங்கள் ஏற்பட்டன. இது விவசாயிகளும் கிராமப் புற மக்களும் நேரடியாக அரசியல் நிர்வாகத்தில் ஆட்சியில் பங்கு கொள்ளும் வாய்ப்பை அதிகப் படுத்தியது. படிப் படியாக மொழி வழி மக்கள் மாநில ஆட்சி அனுபவங்கள் மூலம் தேசிய இனங்களாகவும் பரிணமித்துக் கொண்டிருக் கின்றன.

மாநில அரசுகளின் அரசியல் அதிகாரம், நிதி அதிகாரம், மொழி வழி மக்களின் கலாச்சார வளர்ச்சி,மொழி வளர்ச்சி ஜனநாயக வளர்ச்சி ஆகிய பிரச்சனைகள், மத்திய அரசின் அதிகாரங்களுடன் இணைந்து மத்திய அரசு-மாநில அரசு களின் அதிகார வரம்பு, அவைகளுக்கிடையில் உள்ள உறவு கள் பற்றிய பிரச்சனையாக எழுந்துள்ளது.

இதில் இதுவரை, இடதுசாரிக் கட்சிகள் மற்றும் பல ஜன. நாயக இயக்கங்களும் கட்சிகளும் பல நல்ல ஆலோசனை களை முன் வைத்தும் .w மத்தியில் இருந்த இ. காங்கிரஸ் கட்சியின் ஆட்சி மத்திய- மாநில அரசுகளின் உறவு பற்றி ஒரு சரியான தீர்வுக்கு பpன் வரவில்லை. மேலும் மேலும் அதிகமாக மத்தியில் அதிகாரத்தைக் குவித்து எதேச்சாதி கார வழியிலேயே சென்றது.

அநேகமாக மாநிலங்களில் அமைந்த எல்லாமாற்றுக்கட்சி அரசுகளையும் மத்தியில் இருந்த இ. காங்கிரஸ் ஆட்சி, பதவி நீக்கம் செய்திருக்கிறது. இ. காங்கிரஸ் கட்சியின் மாநில அரசுகளையும் இஸ்டத்திற்கு தலைமைகளை மாற்றி ஆட்சி களை மாற்றியிருக்கிறது. மாநில அரசுகளின் சட்டமன்றங் களுக்குரிய அதிகாரத்தைக் கொடுக்கவில்லை விரிவுபடுத்த வில்லை.

தேசிய முன்னணி அரசு முதல்தடவையாக மத்திய அரசு மாநில அரசுகளின் உறவுகளை வளர்க்க புதிய முயற்சிகளை எடுத்தது. மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் மாநில அரசுகளைக் கலந்தே முடிவு எடுத்தது, மத்திய அரசுக் கும் மாநில அரசுகளுக்கும் இடையில் எழும் பிரச்சனைகளுக் கும், மாநில அரசுகளுக்கிடையில் எழும் பிரச்சனைகளுக்கும் அவ்வப்போது விவாதித்து தீர்வுகாண மத்திய மாநில அரசு கூட்டுக் குழுக்களைப் புனரமைத்து செயல் படுத்தியது.

மூன்றாவதாக விவசாயிகள் விவசாயப் பொருளாதாரம் பற்றிய பிரச்சனைகளைப்பற்றி முதல் தடவையாகஒரு தீவிர மான அடிப்படையான மாற்றத்தைக் கொண்டுவந்தது. ஒன்று. விவசாயிகளின் கிராமப்புற மக்களின் நீண்டநாள் கோரிக்கை கடன் ரத்து பற்றியதாகும். பத்தாயிரம் ரூபாய் வரையிலான விவசாயிகள் மற்றும் கிராமப்புற ஒழிகளின்