பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 0 0 கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி

இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் இந்தியாவில் பிறந்து வளர்ந்த அறுபதாண்டுக் காலத்தில் இருபது ஆண்டு காலம் தடை செய்யப்பட்டிருந்தது. அக்கட்சியின் மீது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும் சரி, நாடு விடுதலை பெற்ற பின்னரும் சரி, கொடிய அடக்கு முறை, சிறைத் தண்டனை, சித்திர வதை, துாக்கு மேடைகள் . அத்தனையும் கடந்து இன்று நாட்டில் ஒரு மாற்று சக்தியாய், முதலாளித்துவ சக்திகளுக் குப் ப்திலாக பாட்டாளி வர்க்க மாற்று சக்தியாகவளர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தியநாட்டில் தொழிலாளர்களுக்கு முதல்முதல் சங்கம் அமைத்து, அகில இந்திய தொழிற் சங்க காங்கிரஸ் என்னும் முதலாவது தொழிலாளர் அமைப்பை உருவாக் கியதில் முன்னணியில் நின்றவர்கள் கம்யூனிஸ்டுகள்.

இந்திய நாட்டில் ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியர்களுக் கும் ஆங்கிலேயர்களுக்கும் சம உரிமை வேண்டும் என்று காந்தியத் தலைமையில் இந்திய தேசீய காங்கிரஸ் மகா து 5 ட! தீர்மானம் போட்டுக் கொண்டிருந்த போது பரிபூரண சுதந்திரம் வேண்டும் என்னும் தீர்மானத்தை முதல் முதல் கொண்டு வந்தவர்கள் இந்தியக் கம்யூனிஸ்டு

ஆதி .

இந்திய நாட்டில் முதல் முதல் விவசாயிகளுக்கு சங்கம் வைத் துப் போராடியவர்கள், அகில இந்திய கிசான் சபை யை உருவாக்கியவர்கள் இந்தியக் கம்யூனிஸ்டுகள்.

சாதி மத இன மொழி வேறுபாடுகளைத் தாண்டி இந்தியா வின் நகர்ப்புறப் பாட்டாளிகளையும் கிராமப்புறப் பாட்டாளிகளையும் வர்க்க அடிப்படையில் ஒன்று

படுத்தியவர்கள் இந்தியக் கம்யூனிஸ்டுகள்.

இந்திய நாடு விடுதலை பெற்ற பின்னர் சோஷலிஸ் திசை வழிதான் சிறந்தது என்பதற்கு முன்னோடியாத விஞ்ஞான ச்ோஷலிஸ்க் கருத்துக்களை முதல் முதல் இந்தியாவில் பரப்பியவர்கள் இந்தியக் கம்யூனிஸ்டுகள்.

இந்திய நாடு விடுதலை பெற்ற பின் இந்தியக் குடியரசின் அரசியல் சட்டப் படி முதல் பொதுத் தேர்தல் நடந்த போது, இந்தியாவிலேயே மிக அதிகமாக ஒட்டு வாங்கி பாராளு மன்றத்திற்கு வெற்றி பெற்று சென்ற முதல் இருவர் கம்யூனிஸ்டுகள். மூன்றாவது இடம் பெற்றவர் அன்றைய பாரதப் பிரதமர் நேரு.

நாடு விடுதலை பெற்ற பின்னர், இந்திய தேசிய காங்கிரஸிற்கு அடுத்தபடி முதல் முதல் ஒரு மாநிலத்தில்