பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் O 21

களிலிருந்து மறு உற்பத்தி மூலம் ஏராளமான உபயோகப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கடல் மூலமும் ஏராளமான நேரடிப் பொருள்கள் கிடைக் கின்றன. மீன், உப்பு, மற்றும் ரசாயனப் ப்ொருள்கள்,சங்கு முதலியவை கிடைக்கின்றன.

உணவுப் பொருள்கள், பழம் காய்கறி முதலிய துணைப் பொருள்கள், பருத்தி சண்ல், பருப்பு, க்ட்லை, கிழங்கு, பட்டு, மரம், தழை, இயற்கை மருந்துப் பொருள்கள், இலை காய் கனி, கிழங்குகள், சுரங்கங்களிலிருந்து உலோகக் கனிமங்கள், கட்லிலிருந்து கிடைக்கும் மீன், உப்பு, சங்கு, முதலியன, கால்நடைகளான ஆடு மாடு கள், கோழி பன்றி முதலியவை, குதிரை, யானை, ஒட்டகம் முதலிய விலங்குகள் முதலியவைகளும் அவை கள் மூலம் கிடைக்கும் பொருள்களும் இயற்கைச் செல் வங்களும் முதல் நிலை உற்பத்திப் பொருள்கள்.

இந்த முதல் நிலைப் பொருள்களை மூலப் பொருள் களாகவும் கச்சாப் பொருள்களாகவும் கொண்டு இதர ஏராளமான மறு உற்பத்தி மூலம் மனிதத் தேவைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

உதாரணமாக தென்னை மரத்திலிருந்து தேங்காய் மட்டைகள் கிடைக்கின்றன. தேங்காயிலிருந்து எண்ணெய். எண்ணெயிலிருந்து வனஸ்பதி, சோப்பு முதலியன, நாரிலிருந்து கயிறுகள், கயிற்றிலிருந்து பாய்கள், மட்டை யிலிருந்து ஒலை, - இவ்வாறு மறு உற்பத்தி மூலம் எண்ணற்ற பொருள்கள் உண்டாக்கப்படுகின்றன.

நமது நாட்டில் முதல் நிலை உற்பத்திப் பொருள்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன. அவைகளிலிருந்து கிராமத் தொழில் பழைய தொழில்கள் மூலம் மறு உற்பத்தியும் செய்து இந்திய சமுதாயம் சுய தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டு வாழ்ந்து வந்தது.

இந்த வளம் நிறைந்த பாரத சமுதாயத்திற்கு, LI யெடுப்புகளால், இயற்கை சீற்றங்களால் சில கொடுமை கள் நேர்ந்த போதிலும் அவை தாற்காலிகமானவை களாகவே இருந்தன. o

படையெடுப்பாளர்கள் இங்கு வந்து சில பொருள்களைக் கொள்ளை அடித்துக் கொண்டு உடனே திரும்பிச் சென்று விட்டார்கள், சிலர் இங்கேயே தங்கி இந்திய மக்களுடன் இணைந்து விட்டார்கள். புெரு வெள்ளமும், பேய்க் காற்றும் வறட்சியும் பஞ்சமும் ஜம்பட்டால் அதை தாற்காலிகமாகவே வந்து விட்டுப் போய் விட்டன.