பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ) கிராமப் புறப் பாட்டாளிகளை நோக்கி . .

கொடுமைகள், சமபக் கொடுமைகள் அதிகரித்து, விதிப்பயன் என்று மக்களுக்கு அக்கறை குறைந்து, சோர்வு மேலோங்கி. மந்தமும் தேக்கமும் மூடநம்பிக்கைகளும் அதிகரித்தன.

இவ்வாறு வளமும் செல்வமும்,சிறந்த கலாச்சாரமும் அறிவு வளர்ச்சியும் ஒரு புறமும், தேக்கமும் சோர்வும் அறியாமையும் மூட நம்பிக்கைகளும் சமுதாயக் கொடுமை களும் மறுபக்கமுமாக இந்திய சமுதாயம் மன்னராட்சி முறையில் நீடித்திருந்தது.

ஆயினும் இதன் இயற்கை வளமும் மனித முயற்சியும் உழைப்பாற்றலும் குறையவில்லை. ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன? யார் ஆண்டால் என்ன? நமது வேலையை நாம் கவனித்துக் கொண்டு காலத்தைக் கழிக்கலாம் எனக் கவலையை மறந்தும் பாரத மக்கள் பெரும் தேக்கத்தில் மட்டுமல்லாமல் ஆழ்ந்த தூக்கத்திலும் மூழ்கியிருந்தார்கள்.

அந்த நேரத்தில் தான் ஐரோப்பியர்களும் ஆங்கிலேயர் களும் இந்தியாவிற்கு வந்தார்கள்.

மனித சமுதாயம் காக்கப்படுவதற்கும் அதன் வளர்ச்சிக் கும் உற்பத்தி வளர்ச்சி அவசியமாகும். மனிதனின் தேவைகள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக் கின்றன. நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டேயிருக்கும் சமுதாயத்தின் தேவைகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப் பட வேண்டுமானால் உற்பத்தி இடைவிடாமல் பெருகிக் கொண்டேயிருக்க வேண்டும். விநியோகமும் சீராக அமைய வேண்டும்.

சமுதாய உற்பத்திக்கு அடிப்படை ஆதாரமாக அமைந் திருப்பது முதல் நிலை உற்பத்தியாகும். முதல் நிலை உற்பத்தி தான் மறு உற்பத்திக்கும் செல்வ வளர்ச்சிக்கும் ஆதாரமாக அமைந்திருக்கிறது.

முதல் நிலை உற்பத்தி என்பது, நிலம் நீர், மலை, காடுகள், கடல் சுரங்கங்கள் மூலம் கிடைக்கும் பொருள்களாகும். நிலத்தில் சாகுபடி மூலம் ஏராளமான பொருள்கள் கிடைக் கின்றன. உணவுப்பொருள்களும் தொழில்களுக்கு வேண்டிய மூலப்பொருள்களும் கிடைக்கின்றன.

நிலமும் காடுகளும் கால்நடை வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைந்துள்ளன. அத்துடன் மலைக்காடுகளிலிருந்து மரம், காய், கனி, கிழங்குகள், இலை, விதை, முதலிய ஏராள மான பொருள்கள் கிடைக்கின்றன. காடுகள், மலைகள் சுரங்கங்கள் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் மூலப் பொருள்