பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் 0 19

கள் தம் சிலப்பதிகாரக் காப்பியத்தில் அரசியல் பிழைத் தோருக்கு- அல்லன செய்தோருக்கு அறம் கூற்றாகும் என்று குறிப்பிடுகிறார் இவ்வாறு ஏராளமான பழைய இலக்கியங்களைச் சுட்டிக் காட்டலாம். -

மன்னராட்சி முறையில் தொடக்க காலத்தில் நாட்டின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு அந்த ஆட்சி முறை உதவியாக இருந்தது. விளைநிலங்களைப் பெருக்க, நீர்ப்பாசன நிலைகளைப் பெருக்க கால்நடைகளைப்பாது காக்க கிராமப்புறத் தொழில்களை வளர்க்க, வாணிபத்தை வளர்க்க, வழித்துணைகளை ஏற்படுத்த உதவினார்கள்.

இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு.

என உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு அரசின் பங்கு பற்றி வள்ளுவர் எடுத்துக் கூறுகிறார்.

செங்கோல் மன்னர்கன் ஆறில் ஒரு பங்கு, பத்தில் ஒரு பங்கு என குறைவாகவே வரி விதித்தார்கள். மக்களின் ஒத்து ழைப்புடன் நீர்நிலைகளையும் கலைக்கோவில்களையும் பெருக்கினார்கள்.

கொடுங்கோல் மன்னர்கள் வரிகளை அதிகப்படுத்தினார்கள்; மூன்றில் ஒரு பங்கும் அதற்குமேலும் வரிவசூல் செய்தார்கள்.

தங்கள் பெயருக்கும் பெருமைக்குமாகப் போர்களை நடத்தினார்கள். பல ஆடம்பர விளையாட்டுக்களை நடத்தி செல்வங்களை வீணடித்தார்கள். அதனால் மக்களுடைய

கஷ்டங்கள் அதிகரித்தன.

நாளா வட்டத்தில் அரசர்களின் கடமைகள் குறைந்து அவர் களும் அவர்களுடைய ஆட்சி முறையும் சமுதாயத்தின் மீது கடும் சுமையாக மாறின. போர்கள், வீண் ஆடம்பரங்கள், விளையாட்டுகள், ஆட்சியில் மக்களின் நலன்களில் எந்த கவனமும் இல்லாமை, வரி அதிகரிப்பு, தடி எடுத்தவன் தண்டல்காரன்-இவ்வாறான கொடுங்கோன்மை சமுதாயத் தின் மீதான கொடும் சுமையாக-தாங்க முடியாத பாரமாகப்

பெருகியது.

விவசாயம், தொழில் முதலியவைகளுக்கு அரசினுடைய உதவி ஆதரவு குறைந்து மக்கள் தங்கள் சொந்த முயற்சி யில் முடிந்த அளவு செயல்பட்டுக் கொண்டிருந்தார்சள். ‘இன்றுகட்டுண்டோம் பொறுத்திருப்போம், காலம்

மாறும்’ என்று காத்திருந்தார்கள்.

ஆட்சி முறைமையில் பலவீனங்கள் அதிகரிக்கும்போது, சமுதாயக் கொடுமைகள், சமுதாயச் சீரழிவுகள், சாதிக்