பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 O கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.

கான பாதைக்கும், சுடுகாட்டிற்கும் கூட உரிமைகள் கேட்டு கிளர்ச்சிகளும் போராட்டங்களும் நடந்துள்ளன.

இவை யெ லாம் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான. ஜமீன் இனாம் மடங்களின் நிலப்பி புத் துவக் கொடுமைகளுக்கு எதிரான, மேல் தட்டுக்காரர்களின் அரட்டல்கள் உருட்டல் அடக்கு முறைகளுக்கு எதிரான போராட்டங்களின் இனைப்பாகவே சென்றிருக்கின்றன.

கட்டபொம்மன் சகோதரர்கள், மருது சகோதரர்கள் தலைமையில் சாதி வேறுபாடுகள் இன்றிப் பல லட்சக் கணக் கான கிராமப்புற மக்கள் ஆங்கிலேயர் ஆட்சியின் கொடுமை களை எதிர்த்தும் வரிக் கொள்ளை எதிர்த்தும் மிகப் பெரிய அளவில் ஆயுதம் தாங்கிய போராட்டங்களை நடத்தியுள்ளார்கள்.

மலபாரில் ஆங்கிலேயர் ஆட்சியின் கொடுமைகள், வரிக் கொடுமைகள் வட்டிக் கொடுமைகளுக்கு எதிராகவும், ஜென்மிகள் என்று சொல்லப்படும் நிலப்பிரபுக்களின் கொடு ம்ைகளுக்கு எதிராகவும் மாப்ளா முஸ்லிம் விவசாயிகள் நடத்திய போராட்டம் ஏகாதி த்திய எதிர்ப்பு நிலப்பிர புத்துவ எதிர்ப்புத் தன்மை கொண்டத கும்.

திப்பு சுல்தான் அன்று பிரான்ஸ் நாட்டில் இருந்த முற் போக்கு முதலாளித்துவ அமைப்பாக இருந்த ஜாக்கோபின் கிளாப் என்னும் அமைப்பில் உறுப்பினராக இருந்து தென்னிந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்குத் திட்டம் வெளி யிட்டார். அந்த திட்டம் ஆங்கிலேய ஆட்சி முறைக்கு எதிரானதும், நமது நாட்டின் விவசாயம் தொழில் கல்வி ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் ஆன திட்டமாகும்.

வேலூர் சிப்பாய்க் கலகம் என்று கூறப்படும் ஆங்கிலேய எதிர்ப்புப் போராட்டமும் விவசாயிகளின் கிளர்ச்சியின்

பிரதிபலிப்பே யாகும்.

18ஆம் நூற்றாண் டின் பிற்பகுதி பில் தமிழகத்தின் வடக்குப் பகுதிகளில் ஆங்கிலேய கம்பெனி ஆட்சியினர் நடத்திய கொடுமையான் கொள்ளை சுரண்டல்களுக்கு எதிராக விவசாயிகளிடத்தில் ஏற்பட்ட உள்ளக் குமுறலின் பிரதி பலிப்பே ராமலிங்க அடிகளாரின் கருணையில்லா ஆட்சி கடுகி ஒழிக. என்னும் கோபக் குரலாகும்.

வங்காளத்தில் வந்தே மாதர கீதம் தோன்றியதும், கிராமப் புற இளைஞர்கள் சாதுக்களின் வேஷம் கொண்டு, ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்து நடத்திய ஆயுதம் தாங்கிய போராட்டமும் விவசாயிகளின் கொந்தளிப்பின் ஒரு குதியே (5LD . -- “ - --