பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சினிவாசன் | 73

லட்சத்திற்கும் மேற்பட்ட ஆயில் என்ஜின்கள் தமிழ கத்தில் பயன் படுத்தப்படுவதாகக் கணக்கு கூறப்படுகிறது.

மின்சாரப் பயன்பாடும் கிணற்றுப் பாசனத்தில் மின்சார பம்புசெட்டுகள் வந்த தும் த மிழகத்தின் விவசாயத்தில் மிகப் பெரிய வளர்ச்சிக்கு உதவியது.

நீர்ப்பாசன முறைகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைத் தொடர்ந்து விவசாயத் துறையில் புதிய நவீன முறைகளும் பசுமைப் புரட்சி என்னும் பெயரில் கொண்டு வரப்பட்டது.

ரசாயன உரம், பூச்சி மருந்து, புதியரக வீரிய வித்துக்கள் முதலியன அதிகமாக செயல் முறைக்கு வந்தன. இதையே பசுமைப்புரட்சி என்று குறிப்பிட்டனர். நமது நாட்டின் விவசாயத்தின் உரத் தேவையை ஒட்டி ரசாயன உர உற் பத்தித் தொழிற் சாலைகள் வளர்ந்தன. பூச்சி மருந்து உற்பத்திக்கான ரசாயனத்தொழிற்சாலைகளும் வளர்ந்தன.

விவசாயக் கல்லூரிகளும் ஆராய்ச்சிப் பண்ணைகளும் வளர்ந்தன. நெல் இதரதானியங்கள், பருப்பு, நிலக்கடலை, பருத்தி, கரும்பு முதலிய பல பொருள்களிலும் வீரிய வித்துக் கள் உண்டாக்கப்பட்டு பழக்கத்திற்கு வந்தன.

இத்தகைய நவீன விவசாய முறைகள் மூலம் விவசாய உற்பத்தி குறிப்பிடத்கக்க அளவில் வளர்ச்சியடைந்தது.

நவீன முறை விவசாய வளர்ச்சியை ஒட்டி, டிராக்டர்கள், புல்டோசர்கள், லாரிகள், டெம்போக்கள், ஸ்பிரேயர்கள், ஜின்னிங் பாக்டரிகள், அரிசிமில், மாவுமில், எண்ணெய் மில்கள், சவ்வரிசி-சேமியா பாக்டரிகள் போன்றவையும் கிராமப்புறத் தொழில்கள் மூலம் புதிய நவீன உற்பத்திக் கருவிகளும் வளர்ச்சியடைந்தன,

இவையெல்லாம் கிராமப்புற உற்பத்தி முறையில் I &t) மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன

இந்தப் புதிய உற்பத்தி முறைகளைக் கடைப்பிடித்து செயல் படுத்துவதற்கு விவசாயிகளுக்கு சிறிய அளவிலேனும் புதிய முதலீடுகள் தேவைப்பட்டன. ஏற்கெனவே விவசாயத் தொழிலை காலத்தில் நடத்துவதற்கு விவசாயச் செலவு களுக்கு, முட்டுவளிச் செலவுகளுக்கு விவசாயிகளுக்கு பணம் தேவைப்பட்டிருந்தது. இப்போது நவீன விவசாய முறை களைச் செய்வதற்கு மேலும் அதிகமான பணம் தேவைப் பட்டது.

எனவே புதிய விவசாய முறை வளர்ச்சியை ஒட்டி விவசாயி களின் கடன் வசதிகளுக்காகக் கூட்டுறவு நான்ய சங்கங்கள். கிராமாந்திரக் கூட்டுறவு வங்கிகள், கிராம வங்கிகள்