பக்கம்:கிராமப்புறப் பாட்டாளிகளை நோக்கி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. சீனிவாசன் 0 89

ஐந்தாவதாக, விசை சக்தி எரிபொருள் நெருக்கடியாகும். இவைகள், நிலக் கரி, எரிவாயு, பெட்ரோல், மரங்கள் (விறகு முதலியன), மின்சாரம் முதலியவற்றிற்கு ஏற் பட்டுள்ள நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வரு கிறது. குறிப்பாக நிலக்கரி, நெருக்கடி பெட்ரோல் நெருக் கடி, மின்சார நெருக்கடி அதிகரித்து வருகிறது. அத்ற்கு முக்கியமான காரணம் நிலக்கரி, பெட்ரோல் முதலிய எரி பொருள்களை முறைப்படுத்தி சிக்கனமாகப் பயன்படுத் தாமையேயாகும்.

இப்போதைய மின்சார உற்பத்தி பெரும்பாலும் அனல் மின் நிலையங்கள் மூலமே அதிக அளவு உற்பத்தி செய்யப் படுகிறது. அதற்கு ஏராளமான நிலக்கரி தேவைப்படுகிறது. நிலக்கரியின் மொத்தக் கனிவள அளவும் குறைந்து கொண் டே வருகிறது. மேலும் மின் உற்பத்தியில் நீர்மின் நிலையங் களையும், அணுமின்நிலையங்களையும் அதிகம் பயன்படுத்த வேண்டும். நீர்மின் நிலையங்கள் எல்லா நாடுகளிலும் சாத் தியமில்லை. அணு மின் தொழில் நுட்பம் எல்லா நாடுகளி லும் வளர்ச்சி பெறவில்லை. இந்த நிலையில் நிலக்கரி நெருக் கடியும், மின்சார நெருக்கடியும் அதிகரித்து வருகிறது. பெட்ரோல் எல்லா நாடுகளிலும் இல்லை. சில நாடுகளிலே இருக்கின்ற து. அந்த சில நாடுகளுக்கு ஆதிக்கம் இருக்கிறது. அல்லது செல்வாக்குப் பிடிப்பு இருக்கிறது. இப்போதைய நிலையில் அராபிய நாடுகளில்தான் அதிகமான் இயற்கை வாயு பெட்ரோல் வளம் இருக்கிறது. அதன் வில்ை ஒரு முக்கிய பிரச்னை. பெட்ரோல் நமது பஸ் ரயில், கப்பல், விமானப் போக்குவரத்திற்கு மிகவும் அவசியமான எரி பொருளாகும். பெட்ரோல், டீசல் இல்லாவிட்டால் அநேக மாக மனித வாழ்வே ஸ்தம்பித்து விடும். எனவே ப்ெட் ரோல் டீசல் நெருக்கடி ஏற்பட்டால், எல்லாவித நெருக் கடியும் அதிகரித்து விடுகிறது. குறிப்பாக விலைவாசி ஆந்துவிடுகிறது. உற்பத்தித் தேக்கம் அதிகரித்து விடு

றது .

இந்த எரிபொருள் விசை சக்தி நெருக்கடியினால் சிறிய நாடுகள், வளர்முகநாடுகள், ஏழை நாடுகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. பணக்காரநாடுகளிலும் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி முதலிய நாடுகள் அதிகமான அளவில் பாதிக்கப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர் பெட்ரே ல் உற்பத்தி செய்யும் நாடுகள் பெட்ரோல் விலையை உயர்த்தியபோது பிரான்ஸ் முதலிய மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பெரிய நெருக்கடி ஏற்பட்டது.

இந்திய நாட்டில் நமக்கு அதிகமான நீர் வளம் இருக்கிறது. நமது நீர் வளத்தைக்கொண்டு மின்சாரம் போன்ற விசை சக்தி உற்பத்தியை பெரும் அளவில் பெருக்க முடியும்.