பக்கம்:கிராம நூலகக் கையேடு.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிராம நூலகங்களில் எத்தகைய நூல்கள் இடம் பெற வேண்டு. மென்பது பற்றி முதலில் பொதுவாகக் கூறப்பட்டது. எனினும் அது பற்றி ஒரு சிறிது விளக்கமாக இங்குக் கூறுவதில் தவருென்று மில்லை கிராம மக்களது விருப்பம், தேவை ஆகியவற்றுக்கு ஏற்ப , கிராம நூலகத்தின் நூல்தொகுதி விளங்க வேண்டும். கிராம மக்களது தேவைகளையும் விருப்பங்களையும் நாம் நன்ருகத் தெரிந்து கொண்டால்தான் அவர்களுக்கு உரிய நூல்களைத் தேர்ந்தெடுக்க முடியும். இது நூலகரின் தலையாய பணிகளில் ஒன்ருகும். கிராம மக்களை அவ்வப்போது சந்தித்து அவர்களது தேவைகளை அவர் நன்கு தெரிந்து கொள்ளவேண்டும். அத்துடன் கிராமத்திலுள்ள எல்லா அமைப்புக்களுடனும் அவர் தொடர்பு கொண்டு கிராம மக்களுக்குத் தேவைப் படுகின்ற அறிவுச் செல்வங்களை அறிந்து கொள் ைவேண்டும். சுருங்கக் கூறின், கிராமத்தில் வாழும் மக்களில் கல்வி அறிவுடையவர்களது எண்ணிக்கை : அவர்களது தேவைகள், கல்வி அறிவினை வளர்த்துக் கொள்வதில் அவர்கள் காட்டும் அக்கறை ஆகியவற்றைப் பற்றிய பொது மதிப்பாய்வினை நூலகர் அவ்வப்போது செய்து அதற்கேற்ற வாறு நூல்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். கிராம நூலகத்திற்கு ጬ ! ) ங்கப்படுகின்ற து ல்கள் பின்வரும் இயல்புகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். 1. அந் நூல்கள் மக்கள் புரியக்கூடிய எளிய நடையில் எழுதப். பட்டிருக்க வேண்டும். அத்துடன் அவைகள் பட விளக்கங்களைக் கொண்டிருக்க வேண்டும். 2. மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய நிலையில் கருத்துக்கள் தெளிவாகவும் நேரடியாகவும் கூறப்பட்டிருக்க வேண்டும். 3. அவைகள் மக்களது படிக்கும் ஆர்வத்தைத் துாண்ட வேண்டும். மேலும் , அவர்கள் ஏற்கனவே பெற்றிருக்கின்ற ஆர்வத்தை நாளும் வளரச் செய்ய வேண்டும். 4. அந் நூல்கள் மக்களுடைய அன்ருட வாழ்க்கைச் சிக்கல்களை எடுத்துக் காட்டுவதோடு, அச்சிக்கல்களைத் தீர்ப்பதற்கு வழிகாட்டவும்