பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


ஆனாலும், இங்கே தான் இந்த ஆட்டம் தோன்றியிருக்கக்கூடும் என்ற அபிப்ராயங்களை பல ஆசிரியர்கள் கூறியிருக்கின்றனர். அதற்கும் மறுப்பும் எதிர்ப்பும் என்று பல நிகழ்ச்சிகள் நிகழ்ந்திருக்கின்றன.

பிரான்சில் பிறந்திருக்கலாம்

ஒரு சில சரித்திர ஆசிரியர்கள் கிரிக்கெட் எனும் இந்த ஆட்டம் கிராகெட்(Croquet) என்று அழைக்கப்பட்ட ஆட்டத்திலிருந்து பிறந்தது என்றும், அந்த ஆட்டம் பிரான்சு நாட்டில் மிகவும் பிரபலமாக ஆடப்பட்டு வந்தது என்றும் அபிப்ராயப்படுகின்றார்கள்.

பிரான்சு நாட்டில் ஆடப்பெற்றுவந்த கிராகெட் எனும் ஆட்டம், திருத்தமடையாத ஒருவிதத் தொடக்க நிலையில், இருந்ததாகவும், அதை பிரெஞ்சு மக்கள் மிகவும் பிரியத்துடன் ஆடி மகிழ்ந்திருக்கலாம் என்றும், கிராகெட் ஆட்டத்திலிருந்தே தற்பொழுது அழைக்கப்படும் கிரிக்கெட் ஆட்டம் கிளைவிட்டுப் பிரிவது போல உருமாறி வந்திருக்கலாம் என்றும், இந்த இனிய ஆட்டத்தைக் கண்ட ஆங்கிலேயர்கள் ஆட்டத்தின் அமைப்பையும் கருத்தையும் ஏற்று இங்கிலாந்துக்குக் கொண்டு வந்து, திருந்திய ஆட்டமாகப் பொலிவுபெற அமைத்துக் கொண்டிருக்கலாம் என்றும் சரித்திர ஆசிரியர்கள் கருதுகின்றனர். இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் அப்பொழுது நெருக்கமான அரசியல் பிணைப்பும், மண உறவும், இருந்து வந்த காரணத்தால். இந்த அடிப்படையில் வைத்து மேற்கூறிய கருத்தைக் கொண்டிருக்கலாம்.

அத்துடன் நில்லாமல், கிரிக்கெட் என்ற சொல்லானது பிரெஞ்சு மொழியில் கிரிக்கே (Krickkay) என்று உச்சரிக்கப்படுவதன் திரிபாக சொல்லை மாற்றி, உச்சரித்து