பக்கம்:கிரிக்கெட் ஆட்டத்தின் கதை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா


இளவரசன் பற்றிய செலவுக்கணக்கு வருகிறது. அதன் வழி ஆராய்ந்து பார்த்தால், நியுவெண்டன், கெண்ட் மாகாண சுற்றுப்புறங்களில் கிரிக்கெட் ஆட்டம் பரவலாக விளையாடப்பட்டு வந்தது என்பதற்குரிய ஆதாரமாக அக்குறிப்பு அமைந்திருக்கிறது.

அப்பொழுது பழக்கத்தில் இருந்த வந்த . பேச்சுவழக்கான இலத்தின் மொழியில் எழுதிய குறிப்பின்படி, குறிப்பிட்ட ஒரு தொகையை இளவரசனுக்காக மற்றவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதும், இளவரசனின் இறகானது (Feather) சரே பகுதி (Surrey) அடையாளச் சின்னமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது என்றும் அறிய இடம் தருகிறது. ஆகவே, 1300ம் ஆண்டு காலத்திலேயே, கிரிக்கெட் சிறந்த வளர்ச்சி பெற்றிருக்கிறது என்று நம்மால் உணர முடிகின்றது. என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

மேலும் ஒரு சான்றினைக் கூறி, கிரிக்கெட் ஆட்டம் சிறு பையன்களால் அதாவது கில்ட்போர்டில் (GuildFort) இருந்த இலவசப்பள்ளியில் பயின்ற பையன்கள் ஆடியதாகவும், ஆண்டு ஏறத்தாழ 1550ம் ஆண்டு என்றும் கூறுகின்றார். கில்போர்டு என்பவர், 1550 ம் ஆண்டு எழுதிய "கில்போர்டு வரலாறு" என்பதில், 'கிரிக்கெட் ஆட்டம்' மீண்டும் பொது மக்களின் பொழுது போக்கு ஆட்டமாக மாறியிருக்கிறது! என்பதையும் குறித்திருக்கின்றார். அவர் கிரிக்கெட் ஆட்டம் என்ற பெயரை முதன் முதலாகக் குறிப்பிடுவது தான் மிகவும் முக்கியம் என்று பெயர் விளக்கத்திற்கும் சான்று காட்டுவார்கள்.

அதற்கு மேலும் ஒரு படி மேலே சென்று, இன்னும் ஒரு சான்றினையும் காட்டுவார்கள். ஜான் டெர்ரிக் என்பவர் தரிசு நிலம் ஒன்றைப் பற்றிய வழக்குக்காக நீதிபதி முன்னே வாதாடும் பொழுது, தன்னைப் பற்றிய உதாரணம் ஒன்றைக் கூறி வாதிட்டார். வாதாடிய ஆண்டு 1493ம் ஆண்டு. நான்